தேனி மாவட்டம்: தமிழ்நாடு காவல்துறை சார்பாக மாநில அளவில் நடந்த 2019-ம் ஆண்டு 63வது காவல்துறை திறனாய்வு போட்டிகளில் கலந்து கொண்ட தேனி மாவட்ட பெரியகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.முகமது யாகியா அவர்கள் விரல்ரேகை பிரிவிலும் தேவதானப்பட்டி காவல் நிலைய Gr-Iதிரு.சிங்கராஜ் அவர்கள் (Portrait) பிரிவிலும் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றனர். இவர்களை பாராட்டும் விதமாக *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன்* அவர்கள் நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார்.