திண்டுக்கல்: மாநில அளவிலான காவல் பணித்திறன் போட்டிகளில் திண்டுக்கல் சரக அணியினர் 5 பதக்கங்களும், ஒரு வெள்ளி கேடயமும் வென்று சாதனை படைத்தவர்களைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் ரொக்க பரிசு வழங்கி பாராட் டினார். தமிழக காவல்துறையினருக்கு மாநில அளவில் சென்னை போலீஸ் அகாடமியில் அறிவியல் சார்ந்த புலனாய்வு பிரிவு, கணினி விழிப்புணர்வு, நாசவேலை தடுப்பு பிரிவு, புகைப்படம் மற்றும் வீடியோ பிரிவு, மோப்பநாய் கண்டுபிடிப்பு ஆகிய பிரிவுகளில் போட்டிகள் 23.09.2019 முதல் 27.09.2019 வரை நடைபெற்றதில் திண்டுக்கல் சரகம், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இருந்து சுமார் 35 போலீசார் கலந்து கொண்டனர்.
இந்ததிண்டுக்கல்ப் போட்டியில் திண்டுக்கல் சரகத்தில் இருந்து மாநில அளவில் ஒரு தங்கம், 4 வெண்கலப் பதக்கங்களையும், அறிவியல் சார்ந்த புலனாய்வு பிரிவில் வெள்ளிப் சுடர் கேடயம் வென்று சாதனை புரிந்துள்ளனர். அறிவியல் சார்ந்த புலனாய்வு பிரிவில் திண்டுக்கல் தாலுகா SI திரு.அழகுபாண்டி ஒரு தங்கமும், திண்டுக்கல் நாசவேலை தடுப்பு பிரிவில் திண்டுக்கல் வடமதுரை நெடுஞ்சாலை ரோந்து பிரிவு SSI திரு.இளவரசு ஒரு வெண்கலம், சாணார்பட்டி காவல் நிலைய முதல் நிலைக்காவலர் திரு.விமல்ராஜ் ஒரு வெண்கலமும் வென்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து மேற்படி போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் வென்று சாதனை படைத்த மேற்படி மூன்று நபர்கள் உட்பட திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து இந்த போட்டிகளில் கலந்து கொண்ட 19 காவலர்களுக்கும் ஆக மொத்தம் 22 நபர்களுக்கும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் பரிசுத் தொகை வழங்கி வெகுவாக பாராட்டினர்.















