தேனி: சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களை நேரில் சந்தித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலைய காவல்துறையினர்.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து பள்ளி மாணவ, மாணவியர்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம், ஒக்கரைபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.P.அழகுபாண்டி (தொழில்நுட்பம்) அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் பெண்கள் பள்ளி மாணவ, மாணவிகள் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், வங்கிக் கணக்குகளின் இரகசிய எண்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும், முகாந்திரம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்தி மற்றும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும், ஆன்லைன் வர்த்தக தளத்தில் பொருட்களை வாங்கும் போது கவனமுடன் பொருட்களை வாங்க வேண்டும்.
என்றும், பரிசுப் பொருள்கள் விழுந்துள்ளதாக வரும் எந்த ஒரு அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள், லிங்க்குகளுக்கு பதில் வைக்க வேண்டாம் என்றும், பண மோசடி சம்பந்தமான குற்றங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலவச உதவி எண் 1930, மோசடி புகார்களுக்கு புகார் செய்ய வேண்டிய இணையதள முகவரி (http://cybercrime.gov.in) வழங்கியும் பெருகி வரும் சைபர்கிரைம் குற்றங்களிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும், சமூக வலைதளங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வு வழங்கினர்.