கோவை : கோவை பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற கோவை நகர காவல் துறையில், பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலரின் குழந்தைகளை காவல் ஆணையர் திரு. பாலகிருஷ்ணன், பாராட்டி புத்தகங்களை பரிசாக வழங்கினார். இதில் சரவணம்பட்டி காவல் நிலைய ஏட்டு காவல் ஆய்வாளர் திரு. சரவணனின் மகள் ஸ்ரீநிதி பிளஸ்-2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று இருந்தார். இதேபோல் மதுவிலக்கு பிரிவில் சிறப்பு காவல் ஆய்வாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி, மகள் பத்மதர்ஷினி, ரத்தினபுரி காவல் நிலையத்தில், சிறப்பு காவல் ஆய்வாளர் திரு. ஹரிதாஸ், என்பவருடைய மகன் ஆகாஷ், குற்றப்பிரிவில் சிறப்பு காவல் ஆய்வாளர் திரு. சுயம்பு, என்பவருடைய மகள் தர்ஷினி ஆகியோர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றனர். அவர்களை காவல் ஆணையர் பாராட்டினார்.