ஈரோடு : ஈரோடு மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த (16), வயது சிறுமி பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் கடந்த 9-ந் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் மொடக்குறிச்சி காவல் துறையினர் , வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மாணவி பள்ளிக்கூடத்துக்கு தனியார் பேருந்தில், சென்று வந்தபோது அந்த பேருந்தின் ஓட்டுநரான, சேலம் மாவட்டம் சங்ககிரி கொங்கனாபுரத்தை சேர்ந்த ரமேஷ் (32), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதும், இந்த பழக்கத்தை வைத்து ஆசை வார்த்தை கூறி மாணவியை ரமேஷ் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும், ரமேஷ் அந்த மாணவியுடன் பவானியில் தங்கியிருப்பதாக மொடக்குறிச்சி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்று நேற்று மாணவியுடன் இருந்த ரமேசை கைது செய்தனர். மேலும், ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாணவி மீட்கப்பட்டு காப்பகத்தில், அனுமதிக்கப்பட்டார்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :