திண்டுக்கல் : திண்டுக்கல் வடமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த (15), வயதான 10-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த வாரம் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், வடமதுரை காவல் துறையில், புகார் செய்தனர். அதன்பேரில் காவல் துறையினர், விசாரணை நடத்தினர். விசாரணையில், வேடசந்தூர் அருகே உள்ள பூசாரிகவுண்டனூரை சேர்ந்த வீரமணிகண்டன் (22), ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.
மேலும் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில், மாணவியை வீரமணிகண்டன் மறைத்து வைத்திருந்தார். வீரமணிகண்டனுக்கு அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் (28), கடவூர் அய்யம்பாளையத்தை சேர்ந்த குமரவேல் (19), ஆகியோர் உதவி செய்துள்ளனர். இதனையடுத்து வீரமணிகண்டன் உள்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் மாணவியை மீட்டு, அவரது பெற்றோரிடம் காவல் துறையினர், ஒப்படைத்தனர்.