நாமக்கல்: நாமக்கல் மாவட்டம்¸ கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லூரியில் நுண்கலை மன்ற விழா¸ முத்தமிழ் விழா¸ விளையாட்டு விழா பட்டமளிப்பு மற்றும் ஆண்டு விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் 13.02.2019-ம் தேதியன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அர.அருரளசு IPS அவர்கள் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்து. பின்பு பேசுகையில் பெண்களுக்கு தான் மனவலிமை அதிகம் உள்ளது, அதே சமயம் பெண்கள் தான் அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலைகளுக்கு காரணம் தோல்விகளை தாங்கி கொள்ளாதது தான், எதிலும் 100 சதவீதம் வெற்றி பெற முடியாது. அதில் கிடைக்கும் தோல்விகளை பழகி கொள்ள வேண்டும். அப்போது தான் எந்த செயலையும் எளிதில் செய்ய முடியும்’ என அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.