கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் அகிம்சகுமார். இவரது மகன் சேனாதிபதி (வயது 20) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. காம் .சி.ஏ.,இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் கடந்த 1ஆம் தேதி இரவு பூண்டி வெள்ளிங்கிரி மலைக்கு சென்றுவிட்டு 2நாட்கள் கழித்து வீடு திரும்பினார். பிறந்த 13 ஆம் தேதி மன அழுத்தம் காரணமாக வீட்டில் இருந்த பினாயிலை எடுத்து குடித்து விட்டார் ,பின்னர் இவரை வால் பாறை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
18-ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்துவிட்டார். எர் இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின் விசிறி கொக்கியில் சேலையை கட்டி தூக்கில் தொங்கினார் இதைப்பார்த்த குடும்பத்தினர் அவரை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர வழியில் அவர் இறந்துவிட்டார். இதுவரை குறித்து அவர் தாயார் ஜோதி வால்பாறை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.