சென்னை : மாங்காடு காவல் துறையினர் , நேற்று முன்தினம் கோவூர் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில், நின்றிருந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில், கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், கோவூரை சேர்ந்த மணி, (28), சிலம்பரசன், (27) ஆகிய இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. ஆந்திராவில், இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கிவந்து சிறு, சிறு பொட்டலங்களாக பிரித்து, குன்றத்துார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், கல்லுாரி மாணவர்களை குறிவைத்து, இவர்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இருவரையும் கைது செய்த காவல் துறையினர் , அவர்களிடம் இருந்து, இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.