திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட எஸ்பி. பாஸ்கரன், உத்தரவின் படி காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.பரமசாமி, திரு .ஜான்சன், திரு .ஜெயக்குமார், ஆகியோர் சாணார்பட்டியில் ரோந்து பணியில், ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் படிக்கட்டுகளில் மாணவர்கள் சிலர் நின்றபடி பயணம் செய்ததை பார்த்த காவல்துறையினர் , பேருந்துகளை நிறுத்தி படியில், பயணம் செய்த மாணவர்களை கீழே இறக்கி அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி மாணவர்களிடம் இதுபோன்று ஆபத்தான பயணம் செய்யக்கூடாது, என்று காவல்துறையினர், எச்சரிக்கை செய்ததோடு நான் இனிமேல் பேருந்துகளின் படிக்கட்டுகளில், தொங்கிக்கொண்டு சாகச பயணம் செய்ய மாட்டேன், எனக்கு படிப்புதான் முக்கியம், என்னுடைய வாழ்க்கைத்தான் முக்கியம் என மாணவர்களை சொல்ல வைத்து உறுதிமொழி ஏற்க வைத்தனர்.