திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் துறையினர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடியாக சென்று மாணவ மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆ. பவன்குமார். அவர்களின் உத்தரவுப்படி உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. D.V. செந்தில் அவர்கள் தலைமையில் போதைப் பொருட்கள் தடுப்பு மற்றும் போர்க் குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி.
செய்யாறு வட்டார பயிற்சி மையத்தில் தடுப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி செய்யாறு வட்டம் வள மையத்தில் வட்டார பயிற்சி மையத்தில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் போதைப் பொருட்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் இருந்து மாணவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு எவ்வாறு மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்த பயிற்சியும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
xதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்