திருச்சி: திருச்சி மாநகரில் 04.04.2022 தேதி இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, திருச்சி மாநகர கூடுதல் துணை ஆணையர் அவர்களின் தலைமையில் மாணாக்கர்களுக்கு, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை பற்றியும் அதனை தடுக்கும் நடவடிக்கைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குழந்தை திருமணம் போக்சோ சட்டம் காவலன் SOS செயலி பற்றியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்கள் 181,112 & 1098 ஆகியோரைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சைபர் கிரைம் உதவி எண் 1930 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
















