திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி, ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில், (21.05.202022) மதுரை தேவகி சிறப்பு மருத்துவமனை, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, மற்றும் கண்தான அறக்கட்டளை இணைந்து நடத்தும் காவலர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினர்களுக்கான, இருதய நோய், புற்று நோய், சர்க்கரை நோய்களுக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாமை , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன், அவர்கள் துவக்கி வைத்தார்கள். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் பங்குபெற்ற காவல்துறையினர், மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு காவல் கண்காணிப்பாளர், அவர்கள் நினைவு பரிசு வழங்கினார்கள்.
