சென்னை : சென்னை பெருநகர காவல், மேற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.S.ராஜேஸ்வரி, இ.கா.ப., அவர்கள் தலைமையில் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற சிறார்களுக்கு (Police Boys and Girls Club) மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. Tmt. Rajeshwari IPS, Joint Commissioner of Police (West), conducted a medical camp for Police Boys and Girls Club.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் புதுப்பிக்கப்பட்டும், (GCP-Police Boys and Girls Club) புதுப்பொலிவுடன் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களின் மேற்பார்வை அதிகாரி (Nodal Officer) திருமதி.S.ராஜேஸ்வரி, இ.கா.ப., இணை ஆணையாளர் (மேற்கு மண்டலம்) அவர்கள் தலைமையில் அண்ணா நகர் துணை ஆணையாளர் திரு.சிவபிரசாத், இ.கா.ப, புளியந்தோப்பு காவல் துணை ஆணையாளர் திரு.ஈஸ்வரன், அவர்களின் ஏற்பாட்டின் பேரில் இன்று (02.04.2022) சென்னை பெருநகர காவல் மேற்கு மண்டலத்தில் உள்ள எம்.கே.பி நகர், அரும்பாக்கம், மற்றும் கோயம்பேடு ஆகிய 3 காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு நலம் மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை மற்றும் Be Well மருத்துவமனை மருத்துவ குழுவினர் உதவியுடன் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் 400க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டு கண் மற்றும் உடல் பரிசோதனை செய்து பயனடைந்துள்ளனர். மேலும் சிறார்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டது.