திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி குட்பட்ட இரண்டாவது வார்டில் வார்டு கவுன்சிலர் அபூபக்கர் ஏற்பாட்டில், பொதுநல மருத்துவ முகாம் நடைபெற்றது. மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் திரு. ராஜேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சைகளை மேற்கொண்டனர். ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை வியாதிக்கான பரிசோதனைகளும், சித்தா யுனானி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பிரிவுகளின் கீழ் முகாம் நடைபெற்றது. முகாமினை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் திரு. துரை.சந்திரசேகர், துவக்கி வைத்தார்.
அரியன்வாயல் அரசு நடுநிலைப்பள்ளிக்கான புதிய கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜையையும் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார். அவருடன் மீஞ்சூர் தேர்வுநிலை, பேரூராட்சித்தலைவர் திருமதி. ருக்மணி மோகன்ராஜ், தி.மு.க மீஞ்சூர் நகர செயலாளர் மோகன்ராஜ், நிர்வாகிகள் திரு.சைய்யது அலி யூசுப் அப்துல் சமத் சாகுல் விசிக நிர்வாகிகள், அசார் கொளதம் மீஞ்சூர் வட்டார மேற்பார்வையாளர் திரு. பாலகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சிநிர்வாகிகள், திரு. அன்பரசு,சுகுமார்,தன் னார்வலர்கள் உள்ளிட்ட பலர் இதில், கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு