தென்காசி : தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இந்த பணியினர் மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா. ஜெஸ்லின் மரக்கன்றுகள் நட்டு வைத்து தொடங்கி வைத்தார். உறைவிட மருத்துவர் ராஜேஷ் ,மருத்துவர்கள் லதா, கீதா, புனிதவதி, விஜயகுமார், சொர்ணலதா, இவான்ஜலின், செவிலிய கண்காணிப்பாளர்கள் பத்மாவதி, திருப்பதி, செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இணைந்து மருத்துவ வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். ஏப்ரல் 30க்குள் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நட தீர்மானிக்கப்பட்டுள்ளது.