தென்காசி : மனித நேயமிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தென்காசி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அலுவலகத்தில் தினமும் பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்களை நேரில் சந்தித்து புகார் அளித்து வருகின்றனர். வழக்கம் போல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் புகார் மனுக்களை விசாரணை செய்து கொண்டிருக்கும் வேளையில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் புகார் அளிக்க வந்திருப்பதை அறிந்து உடனடியாக தனது அறையிலிருந்து வெளியே வந்து அவரிடம் புகார் மனுவினை பெற்று தங்களின் புகார் மனு மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு புகார் அளிக்க வந்திருந்த பொதுமக்கள் தங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்..