திருச்சி அன்பாலய காப்பகத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட திரு. பாபு என்பவருக்கு கடந்த 10 வருடங்களாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு சிறிது நினைவு திரும்பியது அவர் காப்பகத்தின் பொறுப்பாளரிடம் அவரை பற்றிய தகவல்களை கூறினார். இதனையடுத்து காப்பகத்தின் பொறுப்பாளரான திரு. செந்தில் குமார் என்பவர் மாநில குற்ற ஆவண காப்பகத்தின் காவல் ஆய்வாளர் திருமதி. தாஹிரா அவர்களிடம் தகவல் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட ஆய்வாளர் அவரது விலாசத்தை கண்டுபிடித்தார். அவரது சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்தில் உள்ள பரோடா காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் சென்னையில் உள்ள மாநில குற்ற ஆவண காப்பத்திற்கு வந்து 02.05.2018-ம் தேதியன்று அவரை தங்களது சொந்த ஊருக்கு அழைத்து சென்றனார்.
21 ஆண்டுகளுக்கு பிறகு பாபு என்பவர் தங்களுக்கு திரும்ப கிடைத்ததை என்னி அவரது குடும்பத்தார் தமிழக காவல்துறைக்கும் மற்றும் அன்பாலய காப்பகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.