பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 06.06.2018-ம் தேதியன்று துரைமங்கலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் 55 வயது மதிக்கதக்க நபர் சுற்றி திரிவதை கண்டு பெரம்பலூர் டவுன் காவல் ஆய்வாளர் மூலமாக வேலா மனநல காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்.
அவருக்கு தொடர் மருத்துவ சிகிச்சை மூலம் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் சில நாட்களாக தன்னை பற்றி புரித்து கொள்ளும் அளவுக்கு சுய நினைவு பெற்று தனது பெயர் மற்றும் சொந்த ஊரின் விவரத்தை தெரிவித்தார்.
அதனடிப்படையில் மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் காவல்துறை இயக்குனர் திருமதி. சீமா அகர்வால் இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் காவல் ஆய்வாளர் திருமதி. தாஹிரா அவர்கள் நடத்திய விசாரணையில் பீகாரில் உள்ள அவருடைய குடும்பத்திற்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டு முழுவிவரத்தை பெற்ற போது அவருடைய பெயர் மிதிலேஷ் என்பதும் கடந்த 2007-ம் ஆண்டு தொலைந்து போனதாக தெரிவித்தனர். மேலும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷா மித்தல் இ.கா.ப அவர்கள் முன்னிலையில் 14.03.2019-ம் தேதியன்று அவரை குடும்பத்தாருடன் ஒப்படைத்தனர்.