ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காவலர் சங்கீதா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
சென்னை கமிஷனர் அலுவலகத்தில், மத்திய குற்றபிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர், வேலூரை சேர்ந்த சங்கீதா. இவர் சென்னையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவரும் இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னால், இவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனை கேள்விப்பட்ட சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சங்கீதாவை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்பு காவலர் நல நிதியில் இருந்து ரூபாய் இரண்டு லட்சம் வழங்கினார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சங்கீதா நேற்று உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான வேலூருக்கு கொண்டு செல்லபட இருக்கிறது. அங்கு அவரது உடலுக்கு இறுதி மரியாதை செயப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளது.