திருவள்ளுா் : திருவள்ளுா் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூரில், பஜார் வீதியில், பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் மாநில செயலாருமான திரு. துரை, திரு. சந்திர சேகர், தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஈடுபட்டனர். மத்திய பா.ஜ.க அரசு நான்கு ஆண்டுகள் ராணுவ ஒப்பந்த அடிப்படையில், கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்தை எதிர்த்தும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழப்பினர். இதில், மாநில துணைத்தலைவர் திரு. டி.எல். சதாசிவலிங்கம், மீஞ்சூர் வட்டார தலைவர் துரை பாண்டியன் பொன்னேரி நகர் தலைவர் கார்த்திகேயன், ஆரணி நகர தலைவர் சுகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திசேகர் பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்தினால் ராணுவத்தில், மறைமுகமாக மதவாதத்தை பா.ஜ.க, அரசு புகுத்து வதாகவும் அக்னிபாத் திட்டத்தினால், நாட்டில் இளைஞர்கள் மத்தியில், கொந்தளிப்பு ஏற்ப்பட்டுள்ளதாகவும் சிறுபாண்மை மக்களுக்கு எதிராக பா.ஜ.க அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு