ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், சட்டம் ஒழுங்கு மற்றும் மது விலக்கு பிரிவு காவல்துறையினர் , தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி நேற்று முன்தினம் மாவட்டத்தில், மலையம்பாளையம், பவானிசாகர், வெள்ளோடு, கொடுமுடி, பங்களாபுதூர், பெருந்துறை, சிவகிரி, சென்னிமலை ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் , தீவிர சோதனை மேற்கொண்டதில், 11 பேர் மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்துகாவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து 11 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, 108 மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :