மதுரை: மதுரை ஏப்ரல் 10 ஆன்லைன் மூலம் ஊழியர்களுக்கு பணம் அனுப்பிய தொழிலதிபரிடம் நூதன முறையில் ரூபாய் அறுபதாயிரம் மோசடியாக திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். அலங்காநல்லூர் கோவில் பாப்பாகுடி சேர்ந்தவர் சேதுராமன் 48. இவர் தொழில் அதிபர் ஆவார். ஆசாரி வேலை பார்த்து வருகிறார். காண்ட்ராக்ட் வேலை எடுத்து செய்து வருகிறார். அவரிடம் பலர் வேலை பார்த்து வருகின்றனர். இவர் விளாங்குடி கிளை எஸ்.பி.ஐ.வங்கியில் கணக்கு வைத்துள்ளார். வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அவர் வங்கி கணக்கு மூலம் யோனோ ஆப் மூலம் பணம் அனுப்பி வந்தார் . இந்த நிலையில் சம்பவத்தன்று தொழிலாளர்களுக்கு பணம் அனுப்ப முயற்சி செய்தபோது ஆப் வேலை செய்யவில்லை.
அவர் முயற்சி செய்த சிறிது நேரத்தில் அவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் ஆப் வேலை செய்யவில்லை என்று கூறி வங்கி விவரங்களை கேட்டு உள்ளனர் . இவர்களுக்கு வங்கிக் கணக்கு விவரங்களை அவர் தெரி வித்து ள்ளார். தெரிவித்த சில நிமிடங்களிலேயே அவருக்கு இரண்டு மெசேஜ் வந்தது. அந்த மெசேஜில் முதலில்ரூ 24 ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று எட்டும் மற்றொரு மெசேஜில் ரூ35,001ம் எடுத்ததாக தகவல் வந்துள்ளது. பின்னர் அந்த எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்டபோது தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.அப்போதுதான் அவர் ஏமாற்றப்பட்து. அவருக்கு தெரியவந்தது. இது குறித்து சேதுராமன் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி ஆசாமிகளை தேடி வருகின்றனர்..
சிலைமானில் மளிகை கடைக்காரர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு 2 பேர் கைது. மதுரை ஏப்ரல் 10. சசிலை மானில் மளிகை கடைக்காரர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை அருகே கல்மேடு இளமனூர் ரோட்டை சேர்ந்தவர். ஆறுமுகம் 52. இவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடையின் முன்பாக சம்பவத்தன்று கல்மேடு விநாயகர் நகரை சேர்ந்த நாகராஜ் மகன் சூர்யா 24 மற்றும் வண்டியூர் சமயன் கோவில் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் அஜித்குமார்19 இருவரும் குடிபோதையில் ஆபாசமாக பேசி கொண்டிருந்தனர். இதை ஆறுமுகம் கண்டித்துள்ளார் .இதனால் ஆத்திரமடைந்த இருவரும் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி ஆறுமுகத்தின் வீட்டில் வீசிவிட்டு ஓடி விட்டனர் . இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஆறுமுகம் சிலைமான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சூர்யா 24, அஜித்குமார் 19 ஆகிய இருவரையும் கைது செய்தனர். கூடல் புதூரில்
விஷம் குடித்து சாவு காரணம் என்ன போலீஸ் விசாரணை. மதுரை ஏப்ரல் 10 ஆனையூர் வாகை குளத்தை சேர்ந்தவர் பாலமுருகன் 40 . இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது .அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாலமுருகன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மனைவி பிச்சையம்மாள் கொடுத்த புகாரில் கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேல அனுப்பானடியில் பிரபல நிறுவனபெயரில் போலியாக தயாரித்த டீத்தூள் பறிமுதல் விற்பனையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை.
மதுரை ஏப்ரல் 10 மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாகதயாரிக்கப்பட்ட டீத்தூள் விற்பணை செய்துவந்துள்ளனர்.இது அதன் விநியோகஸ்தருக்கு தெரியவந்தது.இது தொடர்பாக அதன் விநியோகஸ்தர் பெங்களூரைச்சேர்ந்த சோமசுந்தரம் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து மேல அனுப்பானடியில் விற்பணை
செய்தராஜ்குமார்51 எனபவரிடமிருந்து ரூபாய் 17,400மதிப்புள்ள டீத்தூள்பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெய்ஹிந்த்புரத்தில் பைக் தீவைத்து எரிப்பு நள்ளிரவில் சம்பவம் மதுரை ஏப்ரல் 10 ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன்27. இவருக்கு சொந்தமான பைக்கை வீட்டு முன்பாக நிறுத்தி இருந்தார். நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் அந்த பைக்கை தீ வைத்து எரித்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து கார்த்திகேயன் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி