மதுரை: மதுரை அருகே ,அரசு பள்ளியை உடைத்து கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை அருகே விரகனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சம்பவத்தன்று இரவு கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பள்ளியில் வைத்திருந்த கேமரா, டேப்லட், கம்ப்யூட்டர், இதர கல்வி உபகரனங்கள் பணம் ரூபாய் 7000 உள்பட ஏராளமான பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இந்த சம்பவம் நடந்த மறுநாள் காலை தலைமை ஆசிரியை சாந்தி, பள்ளிக்கு வந்த போது இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து ,அவர் சிலைமான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, பள்ளியில் கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மதுரை, செல்லூர் அகிம்சா புறம் மேல தெருவை சேர்ந்தவர் திருப்பதி 52. இவர் ட்ரை சைக்கிள் ஓட்டி வருகிறார். யானைக்கல் வாழைக்காய் பேட்டையில் டிரை சைக்கிளை ஓட்டிச் சென்றபோது அங்கு பைக்கில் வந்த 2 வாலிபர்களுடன் தகராறு ஏற்பட்டது. இதில், திருப்பதியை அவர்கள் சரமாரியாக கல்லால் தாக்கினர். இந்த சம்பவம் குறித்து திருப்பதி விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆண்டாள் புரத்தை சேர்ந்த மைதீன் மகன் பாசில் , நெல்பேட்டை காயிதே மில்லத் நகரை சேர்ந்த ஹபீப் ரஹ்மான் மகன் ஷேக்முகமது 21. ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மதுரை மகபூப்பாளையம் அருந்ததியர் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் மனோஜ் குமார் 22 .
இவர், அம்பேத்கார் நகர் பழைய காவல் நிலையம் அருகே சென்றபோது ,அவரை 3 வாலிபர்கள் வழிமறித்து சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, மனோஜ்குமார் எஸ் .எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை தாக்கிய ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகன் மணிகண்டன் 21. மற்றொருவர் 16 வயது சிறுவன், மற்றொருவர் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜ் மகன் ஆகாஷ் 19. ஆகிய மூவரையும் கைது செய்தனர் அவருடன் சேர்ந்து தாக்கிய அருண்குமார் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தில் தயாரித்து வரும் அரசிவிற்பணை லேபிளை பயன்படுத்தி மதுரையில், விற்பனை செய்ததாக 6 மில் உரிமையாளர்கள் மீது வழக்கு ப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மிரல் கூடா டவுனை சேர்ந்தவர் நரசிம்மா மகன் சக்கரவர்த்தி 28. இவர், தெலுங்கானாவில் அரிசி ஆலை வைத்து விற்பனை செய்து வருகிறார். இவரது பிராண்ட் லேபிளை ,பயன்படுத்தி மதுரை கீரைத்துறையில் ஆறு ரைஸ்மில் உரிமையாளர்கள் போலியாக அரிசி விற்பனைசெய்தது தெரியவந்தது. இதுகுறித்து, சக்கரவர்த்தி மீது கீரைத்துறை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் அந்த பகுதியில் உள்ள ராஜ மான்நகர், புது மகாலிபட்டி ரோடு பகுதியைச் சேர்ந்த 6 ரைஸ் மில் உரிமையாளர்கள் மற்றும் போலியாக தயாரித்து விற்பனைக்கு உதவிய சாக்கு பை தயாரிப்பு உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை அருகே விளாங்குடியில், பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த வாலிபரை போலீசார் கைது செய்து அவற்றை பறிமுதல் செய்தனர். கூடல்புதூர் போலீசார் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் விளாங்குடி கருப்பசாமி கோவில் அருகே சென்றபோது, போலீசை கண்டதும் வாலிபர் ஒருவர் ஓடிச்சென்று பதுங்கினார்.
அவரை ச்சுற்றிவளைத்து பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ,அவர் ,கரிசல்குளம் அண்ணா மேல தெருவை சேர்ந்த பாக்யராஜ் மகன் முருகானந்தம் என்ற ஆனந்த் 21 என்று தெரியவந்தது.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கொலை முயற்சியில் ஆயுதங்களுடன் அந்த பகுதியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்து அவரிடம் இருந்த ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி