மதுரை: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவ முன்விரோதம் எதிரொலி வாலிபரை தாக்கிய மற்றொரு வாலிபர் கைது.
மதுரை ஏப்ரல் 5 அவனியாபுரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கிய மற்றொரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவனியாபுரம் முத்துகுமார் சேர்வை தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் பிரகாஷ் 26. அவனியாபுரம் ஜே.ஜேநகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் புறா கார்த்திக் .மூன்றுமாதங்களுக்கு முன்பு இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதன் முன்விரோதத்தில் பிரசன்னா காலனியில் சென்ற பிரகாசை மருதுபாண்டி 21, புறா கார்த்திக் இருவரும் வழிமறித்து அவரை தாக்கியுள்ளனர் .இந்த சம்பவம் குறித்து பிரகாஷ் கொடுத்த புகாரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மருதுபாண்டியை கைது செய்தனர்.
முத்து பட்டியில் குடிபோதையில் டீக்கடை மீது கல்வீசி தாக்குதல் 2 வாலிபர்கள் கைது . மதுரை ஏப்ரல் 5 முத்துப்பட்டி ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் பூவலிங்கம்65. இவர் முத்துப்பட்டியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு குடிபோதையில் வந்த வீரமுடையான்கோவில் முதல் தெருவைச் சேர்ந்த ஜடேஸ்வரன் மகன் நிதீஷ் குமார் என்ற ஜடோ 20,அவனியாபுரம் மெயின்ரோட்டைசேர்ந்த ஆண்டனி மகன் சக்திவேல்22 இருவரும் குடிபோதையில் வந்து டீக்கடை மீது கல் வீசி அவரை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பூவலிங்கம் சுப்பிரமணியபுரம்போலீசில் புகார் செய்தார். புகாரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து நிதிஷ்குமார் , சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
திருநகரில் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை காரணம் என்ன போலீஸ் விசாரணை மதுரை ஏப்ரல் 5 திருநகர் அரவிந்த் நகரை சேர்ந்தவர் வினோத் குமார் 42 .இவர் 4வது தெருவில் உள்ள வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திரு நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலைக்கு செல்ல முடியாத வருத்தத்தில் லோடுமேன் விஷம் குடித்து தற்கொலை. மதுரை ஏப்ரல் 5 செல்லூர் மேல தோப்பு சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் 39. இவர் காய்கறி மார்க்கெட்டில் லோடுமேனாக மேனாக வேலை பார்த்து வந்தார். ஆறு வருடங்களுக்கு முன்பு இவருக்கு கையில் ஆபரேஷன் செய்யப்பட்டது . இதனால் வேலை செய்ய முடியவில்லை . இதன் காரணமாக வேலைக்கு செல்ல முடியவில்லையே என்ற மன வருத்தத்தில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார் . அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மனைவி சாந்தி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் தொகையை செலுத்தியும் அடகு நகையை திருப்பி தர மறுப்பு கணவர் மகன் மீது வழக்கு பதிவு
பெண் உரிமையாளர் கைது.மதுரை ஏப்ரல் 5 கடன்தொகையை செலுத்தியும் அடகு நகையை திருப்பி தராமல் ஏமாற்றிய அடகு கடை பெண் உரிமையாளரை கைது செய்து அவரது கணவர் மற்றும் மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவனியாபுரம் செம்பூரணி ரோட்டை சேர்ந்தவர் குமார் 50. இவருக்கு சொந்தமான எட்டரைபவுன் தங்க நகையை அவனியாபுரம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள கவிதா என்பவருக்கு சொந்தமான அடகு கடையில் அடகு வைத்துள்ளார்.
கடன் தொகையை திருப்பி செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அடகு நகையை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குமார் கேட்டபோது அவரை ஆபாசமாக பேசி மிரட்டியதாக கதறப்படுகிறது. இதுகுறித்து குமார் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து அடகு கடை உ பெண் உரிமையாளர் கவிதா 39, அவரது கணவர் சுப்பையாவை 56, அவர்களது மகன் கார்த்திக் 18 ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து பெண் உரிமையாளர் கவிதாவை கைது செய்தனர்.
மதுரையில் இலவச குத்துச்சண்டை பயிற்சி வழங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு. மதுரை.ஏப்.5.மதுரை மாவட்ட குத்துச்சண்டைகழக நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழுகூட்டம் மாட்டுத்தாவனி அருகே நடந்தது.இக் கூட்டத்தில் மாவட்டகுத்துச் சண்டைகழகத்தலைவர் ராதாகிருஷ்ணன்,பொதுச்செயலாளர் டி.என்.செழியன்,துனை செயலாளர் எஸ்.செல்வக்குமார்,சட்ட ஆலோசகர்கள் ராவணன், கதிரவன்,நிர்வாகிகள் அழகுதர்மராஜ்,சுரேஷ்,மற்றும் மாவட்டகழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் ,குத்துச்சண்டை வளர்ச்சிக்காக ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் இலவச பயிற்சி திட்டத்தை மேலும் விரிவுபடுத்தவும்,மாநில,அகில இந்தியபோட்டிகள் நடத்தவும் ஆலோசனை செய்யப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி