மதுரை: திருப்பரங்குன்றத்தில் முன்விரோதத்தில் டிரைவர் மீது தாக்குதல் உறவினர் உள்பட 4 பேர் கைது மதுரை ஏப்ரல் 4 திருப்பரங்குன்றம் நிலையூர் பரங்கிமலையை சேர்ந்தவர் அசோக் 36. இவர் நிலையூர் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த இவருடைய மாமா ரத்தினம் 60 என்பவரிடம் டிரைவராக வேலை பார்த்தார். கடந்த சில மாதங்களாக இவருக்கு சரியாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அசோக் வேறு இடத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர் ரத்தினம்60, மற்றும் மணிகண்டன் 43, முத்துப்பாண்டி 47, முருகன் 42, ஆகியோர் அசோக்கை வழிமறித்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அவர் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய நான்கு பேர்களையும் கைது செய்தனர்.
அரசு மருத்துவமனை முன்பாக டவுன் பஸ் டிரைவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது. மதுரை ஏப்ரல் 4 அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் டவுன் பஸ் டிரைவரை தாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம் தாலுகா பன்னிக்குண்டு வை சேர்ந்தவர் சிவமணி 38.இவர் அரசு போக்குவரத்து கழக டவுன் பஸ் டிரைவராக பணியாற்றிவருகிறார். இவர் பனகல்ரோட்டில் அரசு மருத்துவமனை முன்பாக பஸ் ஸ்டாப் அருகே டவுன் பஸ்சை நிறுத்த முயன்றார். அதற்கு இடையூறாக வண்டியூர் பாண்டியன் நகரைச் சேர்ந்த முருகன் மகன் சேதுபதி 23என்ற ஆட்டோ டிரைவர் பஸ்ஸை வழிமறித்து ஆட்டோவை நிறுத்தியிருந்தார். இதை அரசு பஸ் டிரைவர் சிவமணி கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் பஸ் டிரைவர் சிவமணியை ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பஸ்டிரைவர் கொடுத்த புகாரில் மதிச்சியம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் சேதுபதியை கைது செய்தனர்.
கரும்பாலையில் முன்விரோதத்தில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது. மதுரைஏப்ரல் 4 .கரும்பாலை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டபிரபு 35. இவருக்கும் கரும்பாலை சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முனியசாமி மகன் மணிகண்டன் 23 என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் அந்தப்பகுதியில் சென்ற மணிகண்டபிரபுவை வழிமறித்து மணிகண்டனும் மற்றொருவர் தினேஷ் என்ள தினேஷ் கார்த்திக் ஆகியோர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மணிகண்ட பிரபு அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய மணிகண்டன்23, தினேஷ் கார்த்திக் 18 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி