மதுரை : பிபி குளத்தில் கத்தி முனையில் வழிப்பறி 2 வாலிபர்கள் கைது. மதுரை ஏப்ரல் 2 மதுரை மாவட்டம் திருவிளாம்பட்டி அழகர்கோவில் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெயராஜ்33.இவர் பீபிகுளம் பி.டி.ஆர் மெயின் ரோட்டில் நடந்து சென்றபோது இரண்டு வாலிபர்கள் வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி அவர் வைத்திருந்த ரூபாய் 500ஐ வழிப்பறி செய்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து ஜெயராஜ் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மேல பனங்காடி கருப்பையா புரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் காளீஸ்வரன் 19, நரிமேடு மருது பாண்டியர் நகரைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் பாண்டி குமார் 20 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கீழமாசி வீதியில் ஆசிட் குடித்த இளம்பெண் பலி மதுரை ஏப்ரல் 27 கீழமாசிவீதியில் ஆசிட் குடித்த இளம்பெண் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை கீழமாசி வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி மனைவி சித்ராதேவி38.இவர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 7 ஆண்டுகளாக அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வீட்டில் ஆசிட் குடித்து உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து கணவர் பாலசுப்பிரமணி கொடுத்த புகாரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்ராதேவியகன் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்ஹிந்த்புரத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் விஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன போலீஸ் விசாரணை. மதுரை ஏப்ரல் 2 ஜெய்ஹிந்துபுரத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகள் சூரிய பிரபா 21. இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர் .இந்த ஏற்பாட்டிற்கு சூரியபிரபாவிற்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. அவரிடம் கேட்காமல் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதை அவர் மாப்பிள்ளை வீட்டாரிடம் தனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். அவர்கள் பெண்ணின் குடும்பத்தினரிடம் அவர் கூறியதை தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர்கள் அவரை திட்டி உள்ளனர். இதன் காரணமாக மனமுடைந்த சூரிய பிரபா வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது சாவுக்காண காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பரங்குன்றத்தில் பாம்பு கடித்து பெயிண்டர் பலி போலீஸ் விசாரணை. மதுரை ஏப்ரல் 2 திருப்பரங்குன்றத்தில் பாம்பு கடித்து பெயிண்டர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாமரத்து பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி மகன் அருண்பாண்டி 24. இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.சமபவத்தன்று இவர் திருப்பரங்குன்றம் புதுக்குளம் அருகே ஒரு இரும்பு குடவுனில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்துவிட்டது .
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கூடல் நகரில் மன அழுத்தத்தில் இருந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை. மதுரை ஏப்ரல் 2 கூடல் நகர் கபிலன் தெருவை சேர்ந்தவர் தீனதயாளன் மகன் தினேஷ் குமார்24. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. மன அழுத்தத்திலும் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தத்தநேரியில் கஞ்சாவுடன் ஆந்திர மாநில கார் பறிமுதல் ஒருவர் கைது. மதுரை ஏப்ரல் 2 தத்தனேரியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்து ஒருவரை போலீசார் கைது செய்தனர். செல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்.இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார் . அவர் தத்தநேரிகளத்துப்பொட்டல்வழியாக சென்றபோது சந்தேகப்படும்படியாக நின்ற காரை நிறுத்தி சோதனை செய்தார். அந்தக் ஆந்திர மாநில பதிவு எண் கொண்டதாக இருந்தது. அந்த காரில் ஒன்றேகால் கிலோ கஞ்சா இருந்தது.அவற்றை பறிமுதல்செய்து காரில் இருந்த கண்ணனேந்தல் ஜி ஆர் நகர் 3வது தெரு சேர்ந்த ஆறுமுகம் மகன் பரமேஸ்வரன் 42 என்பவரை கைது செய்தார்.
கரும்பாலை பி.டி. காலனியில் மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு அதிகாரிகள் இடமாற்றம் நீதிபதி உத்தரவில் அதிரடி நடவடிக்கை. மதுரை ஏப்ரல் 2 மதுரை கரும்பாலை பி.டி .காலனியில் நீதிபதி உத்தரவின் பேரில் மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளை அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்தார். மதுரை கரும்பாலை பி.டி.காலனியில் குடிசை மாற்று வாரியத்தின்கீழ்கட்டப்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 800க்கும் மேற்பட்ட வீடுகளும் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு மாநகராட்சிக்கு சொந்தமான பொதுவான இடத்தில் மாநகராட்சி கழிவுநீர் தொட்டி பராமரிப்பு கண்காணிப்பாளர் மகாலிங்கம் மற்றும் சுகாதார பணியாளரின்தம்பி பணமதுரை ,மற்றொருதம்பி ஆகி யோர் 50க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருவதாகவும் இதனால் ஆடுகளின் கழிவுகள், குப்பை கூளங்கள் அதிகமாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும்,குடியிருப்புக்குள் விஷப்பூச்சிகள் செலவதாகவும்,நோய்பரவும் அபாயமும் இருக்கிறது.
என்று குடியிருப்போர் நலச்சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் பொன்னுசாமி,சிறப்பு வழக்கறிஞர் மத்துக்குமார் ஆகியோர் மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி தீபாவிடம் புகார் மனு அளித்தனர். அவர் அந்த மனுமீது பொதுநலன்கருதி உரிய நடவடிக்கை எடுத்து பதில் அறிக்கை அனுப்பும்படி மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பிவைத்தார்.இதைத்தொடர்ந்து மதுரை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு திடீர் ஆய்வு செய்தார். பின்னர் சுகாதார சீர்கேட்டின்மீது நடவடிக்கை எடுக்காத சுகாதார ஆய்வாளர் ஜான்பீட்டரை அதிரடியாக இடமாற்றம் செய்தார். அந்த பகுதிக்கு முருகன் என்பவரை நியமனம் செய்தார். பின்னர் அங்கு வளர்க்கப்படும் ஆடுகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டதைதொடர்ந்து அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி