மதுரை: தைக்கால் தெருவில் முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து 2 பேர் கைது மதுரை மார்ச் 2 9 . தைக்கால் தெருவில் முன்விரோதத்தில் வாலிபரை வழிமறித்து கத்தியால் குத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். செல்லூர் கீழே தோப்புவை சேர்ந்தவர் வளர்ராஜா 36. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் என்ற இளவரசுவுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் தைக்கால் தெருவில் சென்ற வளர்ராஜாவைவழிமறித்த குமார் என்ற இளவரசு32, சீனி என்ற ராமு ரமேஷ் என்ற கருப்பையா32, ஆனந்த் என்ற வெள்ளையன், பிரகாஷ் என்ற தூம் ஆகியோர்ஆபாசமாக ,பேசி அவரை கத்தியால் குத்திஉள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வளர்ராஜா விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார் என்ற இளவரசு 32 ரமேஷ் என்ற கருப்பையா 32 இருவரையும் கைது செய்தனர் மற்றவர்களை தேடி வருகின்றனர். தேனி மெயின் ரோட்டில் அரசு பஸ் மீது கல்வீச்சு வாலிபர் கைது. மதுரை மார்ச் 29 தேனி மெயின் ரோட்டில் சென்று கொண் டிருந்த பஸ் மீது கல் வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று இரவு தேனி மெயின் ரோட்டில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ் மீது வாலிபர் ஒருவர் கல்வீசி தாக்கினர் .இதில் பஸ் கண்ணாடி உடைந்தது. இந்த சம்பவம் குறித்து நிலக்கோட்டையை சேர்ந்த முருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து போடி லயனை சேர்ந்த மணி மகன் பிரகாஷ் 27 என்ற வாலிபரை கைது செய்தனர்.காமராஜர் சாலையில் நடந்து சென்றவரிடம்செல்போன் பறிப்பு
2 பேர் கைது மதுரை மார்ச் 29 சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் விக்னேஷ் 20 .இவர் காமராஜர் சாலையில் நணந்து சென்ற போது அவரை வழிமறித்த இரண்டு வாலிபர்கள் அவரை மிரட்டி அவரிடம் இருந்து செல்போன் களை பறித்து சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து விக்னேஷ் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கீரத்துரை வேலுப்பிள்ளை தெருவைச் சேர்ந்த முத்துக்கன் மகன் தமிழ் செல்வன் என்ற சொங்கி 25 ,கீரத்துரை மேலத்தோப்புவை சேர்ந்த சதீஷ்குமார் எந்த நாய் சதீஷ் 23 ஆகிய இருவரையும் கைது செய்தனர். சொத்து பத்திரம் திருட்டு கடை ஊழியர் உள்பட 2 பேர் கைது மதுரை மார்ச் 29 மதுரை நேதாஜி ரோட்டில் கண்கண்ணாடி கடை நடத்தி வருபவர் சுந்தரம் 43. இவருடைய கடையில் வேலை பார்த்து வருபவர் அனுப்பானடி பகலவன் நகரைச் சேர்ந்த பிரகாஷ். சுந்தரத்தின் சகோதரர் அவனியாபுரத்தை சேர்ந்த லட்சுமணன் .
சுந்தரத்திற்கு அவரது சகோதரருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் கடையில் வைத்திருந்த பத்திரத்தை காணவில்லை. இதுகுறித்து அவர் திடீர்நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து கடை ஊழியர் பிரகாஷ் மற்றும் சுந்தரத்தின் சகோதரர் லெட்சுமணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். எல்லீஸ் நகரில் ஆடு திருடிய வாலிபர் கைது .கையும் களவுமாக பிடிபட்டார் மதுரை மார்ச் 29 எல்லிஸ் நகர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டி68.
இவர் ஆடு வளர்த்துவருகிறார். இந்த ஆட்டை வாலிபர் ஒருவர் திருடிக்கொண்டிருந்தா அவரை பாண்டி கையும் களவுமாக பிடித்தார். பின்னர்எஸ்.எஸ்.காலனி போலீசில் ஒப்ப டைத்தார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போடிலயனைெ சேர்ந்த அருள்தாஸ் மகன் மாரிமுத்து 38 என்று தெரியவந்தது. அவரை கைது செய்தனர். வளர் நகரில் வீட்டில் வைத்திருந்த 16 பவுன் நகை திருட்டு வேலைக்காரரிடம் விசாரணை மதுரை மார்ச் 29 வளர் நகரில் வீட்டில் வைத்திருந்த 16பவுன் தங்க நகையை திருடியதாக வீட்டு வேலைக்காரரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை வளர் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்64. சம்பவத்தன்று இவர் வீட்டில் வைத்திருந்த 16 பவுன் தங்க நகைகள் மாயமாகி விட்டன. இதுகுறித்து ராமகிருஷ்ணன். மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். புகாரில் வீட்டு வேலைக்காரர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். இது குறித்து மாட்டுத்தாவனி போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த திருட்டு குறித்து வேலைக்காரர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி