மதுரை : மதுரை செல்லூர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (70), இவர் பாண்டி கோவில், அருகே சென்ற போது அவரிடம் பேச்சுக் கொடுத்த (17), வயது சிறுவன் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து முதியவர் கோபாலகிருஷ்ணன் மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில், புகார் செய்தார். காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து அவரிடம் செல்பறித்த (17), வயது சிறுவனை கைது செய்தனர். அவனுடன் இருந்த நண்பர்கள் இருவரை தேடி வருகின்றனர்.
மூன்று வீடுகளில், பணம் திருட்டு, மர்ம அசாமிகள் கைவரிசை!
.
மாடக்குளம் மெயின் ரோடு மருதுபாண்டியர் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ராஜ பிரபு (31), அதிகாலை இவருடைய வீடு புகுந்த மர்ம ஆசாமி வீட்டில், வைத்திருந்த ரூ 5ஆயிரத்தை திருடி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து ராஜ பிரபு எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில், புகார் செய்தார். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
அதே பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (34), இவரது வீடு புகுந்த ஆசாமி வீட்டில் இருந்த ரூ 8700 ஐ திருடிச்சென்று விட்டார். இந்த திருட்டு குறித்து முத்துகிருஷ்ணன் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில், புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து இரண்டு இடங்களிலும் திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர் .
பழங்காநத்தம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சேகர் மனைவி ராமலட்சுமி (39), இவரது வீடு புகுந்த மர்ம ஆசாமி இவர் வீட்டில் வைத்திருந்த ரூ 40 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டார். இந்த திருட்டு குறித்து ராமலட்சுமி சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில்,, புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
முதியோர் பென்ஷன், வாங்கி தருவதாக கூறி திருட்டு!
திருநகரில், கள்ளிக்குடி ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்தவர் ரஞ்சிதம் (58), இவர் திருநகர் ஆக்சிஸ் பேங்க் பில்டிங் அருகே நின்றபோது அவரிடம் வாலிபர் ஒருவர் அவருக்கு முதியோர் பென்ஷன் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியுள்ளார். அவரிடம் நைசாக பேசி அவர் வைத்திருந்த அரை பவுன் நகை மற்றும் செல்போனை திருடி சென்று விட்டார் . இந்த சம்பவம் குறித்து ரஞ்சிதம் திருநகர் காவல் துறையில் , புகார் செய்தார். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து அவரிடம் நகை ,செல் திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
பல்வேறு இடங்களில் வழிப்பறியில், ஈடுபட்ட 8 பேர் கைது!
விளாங்குடி சொக்கநாதபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி மகன் விஜய் (23), இவர் விளாங்குடி கார்ப்பரேஷன் ஆபீஸ் எதிரே சென்றபோது அவரை வழிமறித்த இரண்டு பேர் கத்தி முனையில், மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 600 வழிப்பறி செய்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து விஜய் கூடல் புதூர் காவல் துறையில் , புகார் செய்தார் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிபாடு செய்த விளாங்குடி அண்ணா தெருவை சேர்ந்த குமார் மகன் கணேஷ் (21), புது விளாங்குடி சத்குரு நாதர் தெருவை சேர்ந்த (17), வயது சிறுவன் இருவரையும் கைது செய்தனர்.
மீனாம்பாள்புரம் இந்திரா நகர் 2வது தெருவை சேர்ந்த செல்வ மகன் காளிதாஸ் (28), இவர் செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு குலமங்கலம் ரோடு சந்திப்பில், சென்ற போது அவரை வழிமறித்த விஜய் என்ற துப்பாக்கி விஜய் (25), என்பவர் கத்தி முனையில் மிரட்டி ரூ 420ஐ வழிப்பறி செய்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து காளிதாஸ் கொடுத்த புகாரில் செல்லூர் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விஜய், என்ற துப்பாக்கி விஜய் கைது செய்தனர்.
பீபி குளம் காமராஜர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (41), இவர் இந்திரா நகர் முதல் தெருவில் சென்றபோது அவரை வழிமறித்து கத்தி முனையில், மிரட்டி வழிப்பறி செய்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து கார்த்திகேயன் கொடுத்த புகாரில், தல்லாகுளம் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து திருச்செந்தூர் முத்து என்ற ஜூலி (27), சூர்யா (23), இருவரையும் கைது செய்தனர் .
ஆரப்பாளையம் மேலப்பொன்னகரம் இரண்டாவது தெருவைச்சேர்ந்தவர் விஜய் (32), இவர் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில், நின்ற போது இவரை வழிமறித்து கத்தி முனையில், மிரட்டி இவரிடம் இருந்து 1410, ஐ வழிப்பறி செய்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து விஜய் கரிமேடு காவல் துறையில், புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து ஜெ.ஜெ. ரோட்டை சேர்ந்த விக்னேஷ் என்ற விக்னேஸ்வரன் (23), பொன்னகரத்தை சேர்ந்த மனோஜ் சிவா என்ற மனோஜ் (22), சுடுதண்ணி வாய்க்காலை சேர்ந்த பிரசன்னா (25), ஆகிய மூவரை கைது செய்தனர்.
முன்விரோதத்தில், உரிமையாளர் மீது தாக்குதல் , 2 பேர் கைது!
எஸ் எஸ் காலனி பாரதியார் மெயின் ரோட்டை சேர்ந்தவர் வெங்கடேஷ் (43), அதே பகுதியை சேர்ந்தவர் டேவிட்குமார் இவருக்கும் வெங்கடேஷுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்வதில், முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் பார்த்தசாரதி தெருவில் சென்ற வெங்கடேஷை வழிமறித்த டேவிட்குமார், ஆனந்தராஜ் மகன் ஆகாஷ், மற்றொருவர் வினோத் மூவரும் சரமாரியாக தாக்குதல், நடத்தி அவர் சென்ற வேன் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வெங்கடேஷ் எஸ் எஸ் காலனி காவல் துறையில், புகார் செய்தார். 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து டேவிட்குமார்,ஆகாஷ் இருவரையும் கைது செய்தனர் வினோத்தை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி