மதுரை : வண்டியூர் தீர்த்தக்காடு பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (25), அடுத்த வீட்டுக்காரர் முருகன் மகன் பால்பாண்டி (29), இவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அது கத்திக் குத்துச் சம்பவத்தில், முடிந்தது. இந்த சம்பவத்தில் ஆனந்தராஜ் அண்ணாநகர் காவல் துறையில், புகார் செய்தார். காவல் துறையினர் , வழக்கு பதிவு செய்து பால்பாண்டி அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (35), இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, பால்பாண்டி கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், ஆனந்தராஜ் (25), சர்வேயர் காலனி பாரத் நகரைச் சேர்ந்த ராஜேஷ் என்ற சின்ன கருப்பு இருவரையும் கைது செய்தனர்.
வழிப்பறியில் ஈடுபட்ட, 2 பேர் கைது!
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் கீழடி திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் நாற்பத்தி ஐந்து இவர் மஸ்தான் பட்டியலில், சென்ற போது அவரை வழி மறித்து இரண்டு பேர் அவர் ஓட்டிச் சென்ற பைக்கை, பறித்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து கண்ணன் அண்ணாநகர் காவல் துறையில், புகார் செய்தார். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து பழைய குயவர்பாளையம் மாரிச்செல்வம் என்ற பூக்கடை மாதிரி இருபத்தி எட்டு மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ராஜேஷ் என்ற குட்டி ராஜேஷ் (75), இருவரையும் கைது.
மற்றொரு சம்பவம் பசுமலை, இளங்கோ தெருவைச் சேர்ந்த ராகவன் (53), இவர் திருப்பரங்குன்றம் செல்வம் புத்தக கடை அருகே சென்ற போது அவரை கத்திமுனையில், மிரட்டி அவரிடமிருந்து வைகையும் செல்போனையும் பறித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து ராகவன் திருப்பரங்குன்றம், காவல் துறையில், புகார் செய்தார் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை, தேடியபோது இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எஸ்என்பட்டில், ஈடுபட்டவர்களும் ஒரே நபர் என்று தெரியவந்தது அந்த நபர்கள் அண்ணா மாரிச்செல்வம் ,என்ற பூக்கடை மாறி ராஜேஷ், என்ற குட்டி ராஜேஷ் (25), இருவரையும் கைது செய்தனர்.
முதியவரிடம் கைபேசி பறிப்பு!
திருப்பரங்குன்றம் மைன் ரோடு பாலாஜி நகரை சேர்ந்தவர் துரைராஜ் (66) தேவி நகர் மெயின் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் அவரிடமிருந்து, ரூபாய் ஆயிரத்து நூற்றிஐம்பது,செல் ஒன்றையும் பறித்துச் சென்றுவிட்டார் . இந்த சம்பவம் குறித்து துரைராஜ் திருநகர் காவல் துறையில் புகார் செய்தார். காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து அவரிடம் , வழிப்பறியில் ஈடுபட்ட ஆசாமியை தேடி வருகின்றனர்.
சாலையில் நடந்து, சென்றவர் பலி!
பெத்தானியாபுரம் தாமரை தெருவை சேர்ந்தவர் மருதமுத்து (47), இவர் காளவாசல் பகுதியில், ஒரு டீக்கடை அருகே நடந்து சென்ற போது வெயில் கொடுமை தாங்க முடியாமல், மயங்கி விழுந்தார். அவரை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, மருதமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எஸ். எஸ். காலனி காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர் பலி!
ஆரப்பாளையம் மேலப்பொன்னகரம் இரண்டாவது குறுக்கு தெருவை, சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (65), இவர் வீட்டில் கழிவறைக்கு, சென்றபோது வழுக்கி விழுந்து பலமாக அடிபட்டது. மயங்கிய நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில், சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக, உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கர்மேடு காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளத்தில், வாலிபர் பலி!
தேனி மாவட்டம், பெரியகுளம் பாலாஜி, தெருவை சேர்ந்தவர் அம்மாசி மகன் பால்பாண்டி (20), இவர் பாண்டி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்தார். அங்கு நண்பர்களுடன் மது அருந்திய போது திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மயங்கிய நிலையில் அவரை மதுரை அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாட்டுத்தாவணி, காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து பால்பாண்டியின் மரணத்திற்கான, காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருகக்கர வாகனம் திருட்டு!
மதுரை தபால் தந்தி நகர் பார்க் டவுன் நான்காவது, தெருவை சேர்ந்தவர் சுருளிமலை (58), இவர் மாட்டுத்தாவணி அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது அவர் ஓட்டிச் சென்ற பைக்கை, மருத்துவமனைக்கு எதிராக நிறுத்தி சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அந்த பைக்கை மர்ம ஆசாமி திருடிச்சென்றுவிட்டார். இந்த திருட்டு குறித்து சுருளிமலை கே புதூர், காவல் துறையில், புகார் செய்தார். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து அவரது பைப் திருடிய, ஆசாமியை தேடி வருகின்றனர்.
வீடு புகுந்துகைவரிசை!
மதுரை ரிங்ரோடு ஜெயம் தெருவை சேர்ந்தவர் ஜெயவேல் (32), அதிகாலையில் இவர் வீடு புகுந்த மர்ம நபர் வீட்டில், வைத்திருந்த வெள்ளி விளக்கு 2 வெள்ளி தட்டு ஒன்று முதலியவைகளை, திருடிச்சென்று விட்டார். இந்த திருட்டு குறித்து ஜெயவேல் மாட்டுத்தாவனி காவல் துறையில் , புகார் செய்தார். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி