மதுரை : ஆழ்வார்புரம் வைகை வடகரையை சேர்ந்தவர் நாகராஜ் (45), இவர் வைகை ஆற்றுக்கு குளிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி பலியானார். இந்த சம்பவம் குறித்து அவர் மனைவி சங்கீதா, விளக்குத்தூண் காவல் நிலையத்தில், புகார் செய்தார். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து தண்ணீரில் மூழ்கி இறந்த நாகராஜன், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்
கைபேசி திருடிய, வாலிபர் கைது!
மதுரை ஜெய்ஹிந்துபுரம் முதல் தெருவை சேர்ந்த கோபி (20), இவர் மேலமாரட் வீதியில் லாட்ஜ் ஒன்றின் பின்புறம் சென்ற போது அவரிடம் வாலிபர் ஒருவர் செல்போனை திருடினார். அப்போது அவரை கையும் களவுமாக பிடித்து திடீர் நகர் காவல் நிலையத்தில், ஒப்படைத்தனர். காவல் துறையினர் , வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அந்த வாலிபர், மேலவாசல் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வம் (20), என்று தெரிய வந்தது அவரை கைது செய்தனர்.
பேச்சியம்மன் படித்துறையை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் நந்தகுமார் (19), இவர் ஆதிமூலம் பிள்ளை தெருவில் சென்று கொண்டு இருந்தார் . அப்போது அடையாளம் தெரியாத நபர் அவர் வைத்திருந்த ரூ 17,500 மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு ஓடிவிட்டார் .இந்த சம்பவம் குறித்து கோபிதிலகர் திடல்காவல் நிலையத்தில், புகார் செய்தார். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து அவரிடம் செல்போன் ,பறித்த ஆசாமியை தேடி வருகின்றனர்.
தவறி விழுந்தவர் பலி!
வில்லாபுரம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் குமரன் (42), இவர் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி செய்து வந்தார். இவர் முனியாண்டி புரத்தில், உள்ள கல்லூரி ஒன்றில் முதல் மாடியில் சிசிடிவி கேமரா, பொறுத்திக் கொண்டிருந்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்து பலமாக அடிபட்டது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து திருப்பரங்குன்றம் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம் குடித்து, தற்கொலை!
மீனாம்பாள்புரம் இயேசுநாதர் தெருவை சேர்ந்தவர் பாண்டிச்செல்வி (40), இவர் சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் .இந்த நிலையில் தத்தனேரி சுடுகாட்டில், விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செல்லூர் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நட வருகிறார்.
மனைவிக்கு மிரட்டல்!
பங்கஜம் காலனியை சேர்ந்தவர் வினோபா மனைவி அம்பிகா (33), கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, காரணமாக இவர் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் செய்தார். இந்த புகார் தொடர்பாக காவல் துறையினர், வழக்கு பதிவு செய்துள்ளனர் .இந்த புகாரை வாபஸ் வாங்க வலியுறுத்திஅம்பிகாவை கணவர் மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மனைவி கொடுத்த புகாரில் தெப்பக்குளம் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து கணவர் வினோபாவை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி