மதுரை : பரவையை சேர்ந்தவர் விஷாந்த் (25), இவர் ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு அருகே, 2வது தெருவில் உள்ள ஒரு மளிகை கடை முன்பாக சென்றுகொண்டிருந்தார். அப்போது 2 பேர் அவரை வழிமறித்து, கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 385ஐ பறித்துச் சென்றுவிட்டனர் . இந்த வழிப்பறி குறித்து அவர் ஜெய்ஹிந்த்புரம் காவல் துறையில், புகார் செய்தார் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து மீனாம்பிகை நகர் 9வது தெரு சேர்ந்த சுடலைமுத்து (37), மீனாம்பிகைநகர் முதல் தெருவைச் சேர்ந்த மணிகண்டன், என்ற கிரைம் மணி (23), இருவரையும் காவல் துறையினர், கைது செய்தனர்.
கல்லூரி மாணவர்கள் மோதல்!
வில்லாபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி மகன் ஹரிமதி (20), மதுரை எம் .எம் .சி காலனியை சேர்ந்தவர் முருகன் மகன் வெற்றிவேல் (18), இவர்கள் ஒரே கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் பெருங்குடியில், உள்ள தனியார் கல்லூரியில் முன்பாக உள்ள பேருந்து நிலையத்தில், இருதரப் பினரும் மோதிக்கொண்டனர் . இந்த மோதல் குறித்து ஹரிமதி அவனியாபுரம் காவல் துறையில், புகார் செய்தார். காவல் துறையினர், வெற்றிவேல் (18), ரமேஷ், பரத், மணி, நமச்சி, மகா ,ஆகிய 6 பேர் மீது, வழக்கு பதிவு செய்து வெற்றிவேல்,பரத் இருவரையும் காவல் துறையினர், கைது செய்தனர்.
இருசக்கர வாகனம் திருட்டு!
மதுரை மே 27, புது எல்லீஸ் நகர் சர்வோதய மெயின் ரோட்டை சேர்ந்தவர் கந்தன் (47), இவர் ரூ பத்தாயிரம் மதிப்புள்ள தனது இருசக்கர வாகனத்தை, மகபூப்பாளையத்தில் உள்ள பஞ்சர் கடை ஒன்றில் நிறுத்தி இருந்தார் .பின்னர் வந்து பார்த்தபோது வாகனம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து எஸ். எஸ் காலனி காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனம், திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி