மதுரை : குடிபோதையில் மனைவியை தாக்கிய கணவர் கைது. மதுரை ஏப்ரல் 27, நெல்பேட்டை சீனி, ராவுத்தர் தோப்புவை சேர்ந்தவர் பக்ருதீன் (45), இவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதுபோன்று அடிக்கடி தொடர்ந்து செய்து வந்துள்ளார். இதுபோல சம்பவத்தன்றும் குடிபோதையில் வந்து மனைவியை தாக்கியுள்ளார். இதனால் இந்த சம்பவம் குறித்து பக்ருதீன், மைத்துனர் காஜாமைதீன், தனது சகோதரியை தாக்கியதாக விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை தாக்கிய கணவர் பக்ருதீனை, கைது செய்தனர்.
———————————
பெரியார் பேருந்து நிலையம், அருகே கத்தி முனையில் வழிப்பறி வாலிபர் கைது. மதுரை ஏப்ரல் 27, புது எல்லிஸ் நகர் சர்வோதய குறுக்கு தெருவை சேர்ந்தவர் அழகர் (51), இவர்பெரியார் பேருந்து நிலையம் அருகே கென்னட் ரோட்டில் சென்ற போது அவரை வழிமறித்த வாலிபர் கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 500 ஐ வழிப்பறி செய்து விட்டார். இந்த சம்பவம் குறித்து எஸ் எஸ் காலனி போலீசில் அழகர், புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவளிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சரவணகுமார், என்ற தக்காளியை சரவணனை கைது செய்தனர்.
——————————–
வில்லாபுரம் திருப்பரங்குன்றத்தில், டவுன்பஸ்மீது கல்வீச்சு ஒருவர் கைது. மதுரை ஏப்ரல் 27, வில்லாபுரம் மற்றும் திருப்பரங்குன்றத்தில், டவுன் பஸ் மீது கல் வீசி ஓடிய ஒருவரை ஆசாமியை கைது செய்த போலீசார் மேலும்சிலரை தேடிவருகின்றனர். திருப்பரங்குன்றம் கிளை, அரசு பஸ் டிரைவர் ஜனகராஜன்(49), இவர் வில்லாபுரம், மீனாட்சி நகர் பஸ் ஸ்டாப்பில் டவுன் பஸ்சை நிறுத்திய போது மர்ம ஆசாமி ஒருவர் பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்து விட்டு ஓடிவிட்டார். இந்த தாக்குதல் குறித்து டிரைவர் ஜனகராஜன், அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் மீது கல்வீசி ஆசாமியை தேடி வருகின்றனர்.
திருநகர் எஸ்ஆர்வி, நகரை சேர்ந்தவர் சண்முகவேல்( 40), இர் திருப்பரங்குன்றம், கிரிவலப்பாதையில் டவுன் பஸ் ஓட்டிச் சென்றபோது மூன்று வாலிபர்கள் பஸ் மீது கல் வீசி விட்டு ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம், போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜா என்ற சிங்க ராஜாவை கைது செய்தனர். அவருடன் சேர்ந்து கல் வீசிய தீனா, என்ற தினகரன் மற்றும் மணிமுத்து மகன் மகராஜன், இருவரையும் தேடி வருகின்றனர்.
————————————
முத்துப்பட்டியில், கத்தியை காட்டி பொது மக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மதுரை, ஏப்.27 முத்துப்பட்டி பாண்டியன் நகரில் வாலிபர் ஒருவர் மிகப்பெரிய வாள் ஒன்றை காட்டி பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருப்பதாக சுப்பிரமணியபுரம், போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் திரு. அன்புதாசனுக்கு தகவல் கிடைத்தது. இவர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து அவர் வைத்திருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் நேதாஜி நகர் பாரதியார் ரோட்டை சேர்ந்த சரவணன் என்ற தக்காளி சரவணன் என்று தெரியவந்தது, அவரை கைது செய்தனர்.
——————————–
ஜெய்ஹிந்த் புறத்தில் வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை மதுரை ஜெயந்திபுரம் வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். ஜீவா நகர், முதல் தெரு குறுக்கு தெருவை சேர்ந்தவர் கமலா (60), இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்த இரண்டரை, பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூபாய் 15 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர், போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடிவருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி