மதுரை : மதுரை கரும்பாலையை சேர்ந்தவர் கண்ணன் மனைவி தாயம்மாள் (25), இவர்களது குழந்தை சம்பவத்தன்று திடீரென்று இறந்துவிட்டது. இதனால் மன அழுத்தத்தில், இருந்து வந்த தாய் தாயம்மாள் வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். தீக்காயங்களுடன் அவரை மதுரை அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் தாயம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கணவர் குணா அண்ணாநகர் காவல் துறையில், புகார் செய்தார். காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து மர்ம நபர், கைவரிசை!
விராட்டிபத்து முத்துத்தேவர் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (62), சம்பவத்தன்று இவர் வீடு புகுந்த மர்ம நபர், இவர் வீட்டில் பீரோவில், வைத்திருந்த 14 பவுன் தங்க நகைகள் ,பாஸ்போர்ட் ஒன்று,மற்றும் முக்கியமான டாகுமெண்ட்களை திருடிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து ராஜேந்திரன் எஸ். எஸ் காலனி காவல் துறையில், புகார் செய்தார். காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன உளைச்சலில் இருந்தவர், தற்கொலை!
வண்டியூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் சுந்தரேஸ்வரன் (54), இவர் பணப் பிரச்சினையில் இருந்து வந்துள்ளார். இதனால் மனக் கவலையில், இருந்த சுந்தரேஸ்வரன் சினிப்பிரியா தியேட்டர் அருகே கேபிள் கடை ஒன்றில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அண்ணா நகர் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் பேருந்தில், கைவரிசை!
தேனி பவர்அவுஸ் தெருவை சேர்ந்தவர் கீதா (50), இவர் மாட்டுத்தாவணி, பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் சென்ற டவுன் பேருந்தில், பயணம் செய்தார்.பேருந்து நிலையத்தில், பஸ் நுழைந்தபோது தான் வைத்திருந்த பேக்கை சோதித்தார். அப்போது அதில் வைத்திருந்த 42,1/4 கால் பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கீதா கரிமேடுகாவல் துறையில், புகார் செய்தார். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து ஓடும் பேருந்தில் திருட்டுபயணியை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி