மதுரை : பழங்காநத்தம் தண்டல்காரன்பட்டி, சூர்யா (18), இவர் அலைபேசி வழிப்பறி வழக்கில், துணை ஆணையர் திரு. தங்கத்துரை, தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர். அலைபேசி, டூவீலரை சுப்பிரமணியபுரம் காவல் துறையினர், பறிமுதல் செய்தனர்.
மாணவன் பலி.
சோழவந்தான், நாகமலை புதுக்கோட்டையை அடுத்த, ராஜம்பாடி கல்விநகர் ,சீனிவாசன் (37), தனியார் பேருந்து ஓட்டுநர், இவரது மகன் ரஞ்சித் (17), பிளஸ் 2 தேர்வு எழுதி விடுமுறையில் இருந்தார். நேற்று காலை தேனி மெயின் ரோட்டோரம் நடந்து சென்றார். பின்னால் சென்ற வேன் மோதியதில் ரஞ்சித் இறந்தார். காவல் துறையினர், விசாரிக்கின்றனர்.
மர்ம நபர், கைவரிசை,
நாகமலை புதுக்கோட்டை, பாரதியார் நகர் சந்திரபாண்டி (42), சமயநல்லுார் மின்வாரியத்தில், உதவி பொறியாளர். இவர் வெளியூர் சென்றிருந்த, நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இவரது தாய் மட்டும், தனியாக இருந்தார். இரவில் வீட்டின் கதவு மற்றும் பீரோவை, திறந்த மர்ம நபர் ஐந்தரை பவுன் நகை, ரூ.85 ஆயிரத்தை திருடிச் சென்றார்.
ரூ.5 லட்சம், திருட்டு
திருமங்கலம், திருநகர் சரவணன் கார்த்திக் (37), ஆட்டுப் பண்ணை வைத்துள்ளார். எட்டயபுரம் ஆட்டுச் சந்தைக்கு ரூ. 5 லட்சத்துடன் சென்றுவிட்டு, ஆடு வாங்காமல் பேருந்தில், திரும்பினார். அப்போது அவரது கைப்பையை ,பிளேடால் கிழித்து மர்மநபர் ரூ.5 லட்சத்தை திருடினார். திருமங்கலம் நகர் காவல் துறையினர் ,விசாரிக்கின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி