மதுரை : கரும்பாலை கிழக்கு தெருவை சேர்ந்த சிவா. இவருக்கும் பி.டி.காலனியை சேர்ந்த பழனிச்சாமி மகன் அருண்பாண்டிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், அந்த பகுதியில் சென்ற சிவாவை வழிமறித்து அவரது பைக்கை கத்தியால் கிழித்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிவாவின் தந்தை அண்ணா நகர் காவல் துறையில், புகார் செய்தார். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து வாலிபர் அருண்பாண்டியை கைது செய்தனர்.
கத்தி முனையில், வழிப்பறி!
பொன்னகரம் முதல் தெருவை சேர்ந்தவர் மாடசாமி (42), இவர் சிம்மக்கல் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது இவரை வழிமறித்த ஆரப்பாளையம் கண்மாய்க்கரையைச் சேர்ந்த அஜய் பிரசன்னகுமார், ஜீவமணி இருவரும் கத்தி முனையில், மிரட்டி அவரிடம் இருந்து ரூ 3730 ஐவழிப்பறி செய்து விட்டனர் .இந்த சம்பவம் குறித்து மாடசாமி திலகர் திடல் காவல் துறையில் , புகார் செய்தார். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து அஜய் பிரசன்னா குமாரையும், ஜீவமணியையும் தேடிவருகின்றனர் .
பணம் செல்போன் பறிப்பு!
ஜெய்ஹிந்த்புரம் தென்னகரத்தை சேர்ந்தவர் சந்திரன் மகன் ஜெயக்குமார் (39), இவர் தேவர் பாலம் ஏ.ஏ.ரோட்டில் சென்ற போது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் ஒன்றையும் பணம் ரூ 5ஆயிரத்தையும் வழிப்பறி செய்து ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து ஜெயக்குமார் ஜெய்ஹிந்துபுரம் காவல் துறையில், புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மிரட்டி ரூ 8500 வழிப்பறி!
அவனியாபுரம் முல்லை நகரை சேர்ந்தவர் செல்வம் (44), இவர் தெற்குவாசல் என்.எம்.மார் பாலம் அருகே சென்றபோது அவரை அடையாளம் தெரியாத 3 நபர்கள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 8500ஐ வழிப்பறி செய்து விட்டனர். இந்த வழிப்பறி குறித்து செல்வம் தெற்கு வாசல் காவல் துறையில் , புகார் செய்தார் வழக்குப்பதிவு செய்து பணம் பறித்த 3 ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி