மதுரை : மதுரை கோட்ஸ் லேபர்சொசைட்டி, செகரட்டரி சுப்பிரமணியன் (58), இவர் அண்ணாநகர் காவல் துறையில், புகார் ஒன்றை தெரிவித்து உள்ளார். .அந்த புகாரில் கேகே நகர் 80 அடி ரோட்டில், இயங்கிக்கொண்டிருக்கும் அம்மா மெடிக்கல் ஷாப்பின் கேசியர் ஐயப்பன் . இவர் எல்.என்.பி அக்ரஹாரம் வடக்கு தெருவில் குடியிருந்து வருகிறார். இவர் 2021 மார்ச் முதல் நடப்பு வரை அம்மா மருந்தகத்தின் பணத்தை 8 லட்சத்து 51 ஆயிரத்து 474 ரூபாயை, கையாடல் செய்துள்ளார், என்று தெரிவித்துள்ளார். அவரது புகாரின்பேரில் அண்ணாநகர் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து கேசியர் அய்யனார், மீது வழக்கு பதிவு செய்து, கையாடல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
—————————————–
வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய, குடியிருப்பு ஜவஹர் நகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம், மனைவி முத்து, இவர் எம் எம் .சி காலனியில் தன் சகோதரர் வீட்டு முன்பாக, நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற, 3 பேர் அவர் அணிந்திருந்த 27 பவுன் தாலிச் சங்கிலியை, பறித்து ஓடிவிட்டனர். இந்த நகை பறிப்பு குறித்து, அவனியாபுரம் காவல் துறையில், முத்து புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில், விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட, நபர்களை அடையாளம் தெரிந்தது. செயின் பறிப்பில் ஈடுபட்ட, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பழையனூரைச் சேர்ந்த ஆகாஷ், என்ற விஷம் (19) என்ற வாலிபரை கைது செய்தனர். அவருடன் இருந்த 2 பேரை, தேடி வருகின்றனர்.
———————————
மதுரை மே 21 அண்ணா நகர், செண்பகத் தோட்டம் நியூ எச்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் முத்துக்குமார்(33), இவர் தல்லாகுளத்தில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்றிருந்தார். அங்கு அவர் வைத்திருந்த ரூபாய் 2500, 2 செல்போனகள் திருடு போய்விட்டது. இது தொடர்பாக அவர் தல்லாகுளம்காவல் துறையில், புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா, பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது அவரிடம் செல்போன் திருடிய நபரை அடையாளம் தெரிந்தது. அவர் பீ.பீ.குளத்தைச்சேர்ந்த தியாகராஜன் (40), என்பது தெரிய வந்தது ,அவரை காவல் துறையினர், கைது செய்தனர்.
————————————-
அவனியாபுரம் அருணகிரிநாதர், தெருவை சேர்ந்தவர் முனியாண்டி மகன் வேலு (38), இவர் பைபாஸ் ரோடு, பிரசன்னா காலனி சந்திப்பு அவனியாபுரத்தில், ஒரு காபி கடை முன்பாக சென்ற போது, அவரிடம் கத்திமுனையில் மிரட்டி ரூபாய் 1500 வழிப்பறி செய்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து வேலு அவனியாபுரம் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில், ஈடுபட்ட பெருங்குடி அண்ணா நகர் வடக்கு, தெருவைச் சேர்ந்த ஐயனார், என்ற வாழைக்காய் அய்யனாரை கைது செய்தனர்.
————————————-
மாடக்குளம் மெயின் ரோடு வி.கே.பி நகரை, சேர்ந்தவர் சந்தானம் (45), இவர் மாடக்குளம் மெயின் ரோட்டில், சென்ற போது இவரிடம் கத்திமுனையில், மிரட்டி ரூ 2200ஐ வழிப்பறி செய்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து சந்தானம் புகாரில் சுப்பிரமணியபுரம், காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து சிந்தாமணி, கிழக்கு தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (25) ,அனுப்பானடி தாய் நகரைச், சேர்ந்த மூத்த மகன் ஜெய்சங்கர்(26), அதே பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் எந்த கோபி (28, இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரும், அண்ணன் தம்பிகள் ஆவார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி