ரயில் பெட்டியின் மீது ஏறி, செல்பி எடுத்து விபரிதம்!
மதுரை : மதுரை முல்லை நகர் பழனி என்பவரின் மகன் விக்னேஷ்வர் வயது (17), இவர் தனது நண்பர்களுடன் கூடல் நகர் சரக்கு ரயில் நிலையப் பகுதியில் விளையாட வந்துள்ளான். அவன் நண்பர்களுடன் நேற்று மதியம் அருகில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பெட்டியின் மீது ஏறி விளையாடிக்கொண்டிருந்தான். செல்பி எடுத்தும் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அறியாமல் ரயில் பெட்டியின் மேல் 25,ஆயிர் வோல்ட் மின் பாதையில் அவன் உடல் பட்டுவிட்டது . இதனால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டான்.
இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சிறுவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவன் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தான். பொதுவாக வீடுகளில் பயன்படும் 230 ஓல்ட் மின்சாரம் தாக்கினாலே தாங்க முடியாமல் உடனடியாக உயிரிழந்து விடுவார்கள். ஆனால் ரயில் பெட்டியை இயக்கக்கூடிய மின்சாரம் 25, ஆயிரம் வோல்ட் ஆகும். எனவே பொதுமக்கள் பெரும் ஆபத்தை விளைவிக்கும் இந்த மின் பாதையை நெருங்க வேண்டாம். என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தும் வேண்டுகோள் விடுத்தம் உள்ளது.
கருத்து வேறுபாடு, தூக்கு போட்டு தற்கொலை!
ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் மீனாம்பிகை நகர் ஐந்தாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜு (55), இவருக்கும் இவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மணமுடைந்த ராஜு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஜெய்ஹிந்துபுரம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சர்க்கரை நோயால் இரண்டு கால்களையும் இழந்தவர்,ஆசிட் குடித்து தற்கொலை!
எஸ்.கொடிக்குளம் பாரத் நகரை சேர்ந்தவர் விஷ்ணு (42), இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் அவரது இரண்டு கால்களையும் மருத்துவ சிகிச்சையில் அகற்றிவிட்டனர். எனவே விஷ்ணு வீட்டில் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய தம்பி பிரபாகரன் திருப்பாலை புகார் செய்தார். காவல் துறையில், வழக்கு பதிவு செய்து விஷ்ணுவின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் கொள்ளை திட்டத்தில், பதுங்கி இருந்த 10 பேர் கைது!
மதுரை கரிமேடு காவல் உதவி ஆய்வாளர் திரு. ரத்தினவேலு, இவர் காவல்துறையினருடன் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆரப்பாளையம் அம்மா பாலம் வைகை தெற்கு பகுதியில், கும்பல் ஒன்று சட்டவிரோதமாக பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தார். அவர் காவல்துறையினரரிடம் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தார். பின்னர் அவர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திடீர் நகரை சேர்ந்த பாபு என்ற தக்காளி பாபு (42), வண்டியூர் யாகப்பா நகர் பாண்டியன் நகரை சேர்ந்த முருகன் மகன் சிவா என்ற அஞ்சான் சிவா (20), திடீர் நகரை சேர்ந்த முருகன் மகன் காளிதாஸ் என்ற பல்லு காளி (28), திடீர் நகர் மேலவாசலைச் சேர்ந்த சேகர் மகன் திருமலை என்ற ஜோ திருமலை (25), ஹீரா நகரை சேர்ந்த சக்தி மகன் செல்வராஜ் என்ற ஊமையன் செல்வராஜ் (19) என்று தெரியவந்தது. அவர்களை கைது செய்து அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் அந்த வழியாக செல்வோரை மடக்கி கொள்ளையடிக்கும் திட்டத்தில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.
கொள்ளைக்கும்பல், கைது!
எஸ் எஸ் காலனி காவல் உதவி ஆய்வாளர் திருமதி. பேரரசி, இவரும் வழக்கமாக காவல்துறையினருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் பெரியார் பேருந்து நிலையம் அருகே அருகே உள்ள பாலத்தின் அடியில் கும்பல் ஒன்று சட்ட விரோதமாக பதுங்கி இருப்பதை கண்டார். அவர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தார் .பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மேலவாசல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ராஜா மகன் ஜெபராஜ் பாலா (23), திடீர் நகரை சேர்ந்த சந்தனவேல் மகன் மகேந்திரன் என்ற மண்ட மகேந்திரன் (18), ஹீரா நகரை சேர்ந்த சுந்தரம் மகன் மணிகண்டன் என்ற பேய் மணிகண்டன் (19), அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் பெருமாள் (19), மேலவாசல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த காயாம்பு மகன் பேச்சிமுத்து (31),என்று தெரிய வந்தது. அவர்களும் கொள்ளை அடிக்கும் திட்டத்துடன் பதுங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்களையும் காவல்துறையினர், கைது செய்தனர். மதுரையில் வெவ்வேறு இடங்களில் கொள்ளைஅடிக்கும் திட்டத்தில் பதுங்கியிருந்த மொத்தம் 10 பேரை காவல்துறையினர், கைது செய்துள்ளனர்.
முதியவர் பலி!
விசாலாட்சிபுரம் காலாங்கரையை சேர்ந்தவர் பாண்டியராஜ் (60), இவர் கேகே நகர் மெயின் ரோட்டில், சைக்கிள் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில், உள்ள ஒரு மருத்துவமனை முன்பாக சென்றபோது திடீரென்று தவறி கீழ விழுந்தார். அப்போது அவரை தாண்டிச் சென்ற லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர், லாரி டிரைவர் விருதுநகர் என்.ஜி. ஓ காலனியை சேர்ந்த செல்லம் மகன் ராமர் (43), என்பவர் மீது வழக்கு பதிவு செய்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி