ஆட்டோ ஓட்டுநர்கள் மோதல், 2 பேர் கைது!
மதுரை : மதுரை பொன்மேனி புதூர் 2-வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் கார்த்திக் (26), சம்மட்டி புரத்தைச் சேர்ந்தவர் ஜெகன், இவர்கள் ஆட்டோஓட்டுநர்கள் . இவர்களுக்குள் பணியை ஆட்டோவில், ஏற்றுவது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், காளவாசல் பகுதியில், சென்ற கார்த்திகை வழிமறித்து ஜெகன், பாண்டியன் நகரைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற உசிலைமணி, தனக்கன்குளம் பிஆர்சி காலனியை சேர்ந்த பாண்டி பிரகாஷ் (20), பொன்மேனி ஜவஹர் முதல் தெருவை சேர்ந்த பாண்டி மகன் வேலு (29), ஆகியோர் வழிமறித்து கட்டையால் தாக்கி, உள்ளனர் இந்த சம்பவம் குறித்து கார்த்திக் எஸ். எஸ் காலனி காவல் துறையில் , புகார் செய்தார். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து பாண்டி, பிரகாஷ், இருவரையும் கைது செய்தனர் ஜெகன், சிலம்பரசன் உசிலைமணியை தேடி வருகின்றனர.
வாலிபரை வழிமறித்து உருட்டுக்கட்டை அடி, 3 பேர் கைது!
விளாங்குடி சொக்கநாதபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் மருதுபாண்டிய ராஜா (30), அதே பகுதியை சேர்ந்த அஜய், இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில், நேருநகர் மந்தை முன்பாக பைக்கில் சென்று கொண்டிருந்த மருதுபாண்டிய ராஜாவை வழிமறித்து அஜய் மற்றும் (17), வயது சிறுவன், ஜீவராஜ், கணேசன், ஆகியோர் ஆபாசமாக பேசி மரக்கட்டையால், அடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மருதுபாண்டியராஜா செல்லூர் காவல் துறையில், புகார் செய்தார். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து இமானுவேல், ஜீவராஜ், கணேசன் மூவரையும் கைது செய்தனர்.
ஒரு லட்சம் கேட்டு மிரட்டல், 3 பேர் கைது!
அண்ணாநகர் யாகப்பா நகர் விநாயகர் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (78). இவரது பேரன் மணிமாறனன். இவருக்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் பெண் தொடர்பா முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், மணிமாறன் வீட்டுக்குச் சென்ற ராமநாதபுரம் பனைக்குளம் தாமரை ஊரணியைச் சேர்ந்த வேல்முருகன் (45) ,மதுரை ஆனையூர் மந்தைதிடல், போஸ் மகன் இருளாண்டி எந்த கார்த்திக் (28), மதுரை பைபாஸ் ரோடு தங்கபாண்டி என்ற நர்நயா (45), இவர்கள் மூவரும் மணிமாறனை கடத்திச் சென்று மறைத்து வைத்திருந்தனர். அவர்கள் அவருடைய பாட்டி லட்சுமியிடம் ரூ ஒரு லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து லட்சுமி அண்ணாநகர் காவல் துறையில். புகார் செய்தார். காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து அவரை கடத்திய கும்பலை தேடி வந்தனர் . பின்னர் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவர்களை கைது செய்தனர்.
கத்தி முனையில் வழிப்பறி, 2 வாலிபர்கள் கைது!
ஆணையூர் சிலையநேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சேகர் மகன் பிரேம்குமார் (29), இவர் ஆனையூர் மெயின் ரோட்டில், ஒரு ஹோட்டல் முன்பாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை இரண்டு பேர் வழிமறித்து கத்திமுனையில், மிரட்டி அவர் வைத்திருந்த ரூ 500ஐ வழிப்பறி செய்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து பிரேம்குமார் கூடல்புதூர் காவல் துறையில் , புகார் செய்தார். காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து ஆலங்குளம் கணபதி நகர் 2-வது தெருவை சேர்ந்த சின்னபாண்டி மகன் சரண்ராஜ் (27), அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன் (25), இருவரையும் கைது செய்தனர்.
வீடு புகுந்து லேப்டாப் திருட்டு, வாலிபர் கைது!
பழங்காநத்தம் பசும்பொன் நகர் காளியம்மன் கோவில், தெருவை சேர்ந்த காளிதாஸ் (24), இவரது சம்பவத்தன்று அதிகாலையில், இவரது வீடு புகுந்த மர்ம நபர் வீட்டில், வைத்திருந்த ரூ 90 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப்பை திருடிச் சென்றுவிட்டார். இந்த திருட்டு குறித்து காளிதாஸ் சுப்பிரமணியபுரம் காவல் துறையில், புகார் செய்தார். காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்குப்பின் பழங்காநத்தம் மாடக்குளம் மெயின் ரோட்டை சேர்ந்த கருப்பையா மகன் சித்தன் என்ற வினோத்குமார் (34), என்ற வாலிபர் திருடியது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர்.
கொன்னவாயன் சாலையில், திருட்டு 2 பேர் கைது!
கீழ வைத்தியநாத புரத்தை சேர்ந்த முத்து வழிவிட்டான். இவர் கொன்னவாயன் சாலையில், சென்ற போது இவரிடம் இருந்த செல்போனை இரண்டு பேர் பறித்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து அவர் செல்லூர் காவல் துறையில், புகார் செய்தார். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து அவரிடம் செல்போன் பறித்த கொன்னவாயன் சாலை பெரியார் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் கணேசன் (29), சிங்கம்புணரி கோவில் தெருவைச் சேர்ந்த மாயவேல் மகன் சரவணன் (19), இருவரையும் கைது செய்தனர்.
வீட்டில் போதை பொருள் பதுக்கிய, வாலிபர் கைது!
அவனியாபுரம் காவல் ஆய்வாளர் திரு. சேதுராமன், இவருக்கு கிடைத்த தகவலின்படி எம்எம்.சி காலனியில், டாஸ்மார்க் கடை அருகே வீட்டில், பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர் காவல் துறையினருடன், சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனையில், ஈடுபட்டார். அப்போது எம். எம் சி. காலனியில், வீடு ஒன்றில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பதுக்கி வைக்கப்பட்ட ஒரு கிலோ 800 கிராம் கஞ்சாவையும் விற்பனை செய்த பணம் ரூபாய் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 780 ஐயும் பறிமுதல் செய்து விற்பனைக்கு பயன்படுத்திய பைக் ஒன்றையும் காவல் துறையினர், பறிமுதல் செய்தனர். பதுக்கி வைத்து விற்பனை செய்த வழிவிட்டாள் மகன் மாரீஸ்வரன் (21), என்பவரையும் காவல் துறையினர், கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி