மாநகராட்சி அதிகாரிகள் முன்பு, தீக்குளிக்க முயற்சி!
மதுரை : மதுரை ஆனையூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தமிழ் நகரை சேர்ந்தவர் சிவகாமி (52), இவருடைய வீடு மாநகராட்சி இடத்தில் கட்டப்பட்டிருந்தது. இதை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். இதை எதிர்த்த சிவகாமி உடலில் மன்னனை ஒட்டி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து வடக்கு மண்டல தத்தனேரி வி.ஏ.ஓ. மோகன் தல்லாகுளம் காவல் துறையில், புகார் செய்தார். காவல்துறையினர், சிவகாமி மீது வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநகராட்சி கழிப்பறையை, அடித்து நொறுக்கி சூறை 3 பேர் கைது!
கே. புதூர் சம்பக்குளத்தில், மாநகராட்சி பொதுக்கழிப்பிடம் உள்ளது. இதை சம்பக்குளம் மூன்றாவது தெருவை சேர்ந்த கருப்பையா மகன் கார்த்திக் (27), அதே பகுதியைச் சேர்ந்த மச்சக்காளை மகன் திருஞானம் (26), சம்பக்குளம் நான்காவது தெருவை சேர்ந்த கண்ணன் மகன் விஜய் (23), ஆகிய மூன்று பேரும் புகுந்து அங்கிருந்த குழாய்கள், வாஷ்பேசின் முதலியவைகளை அடித்து உடைத்து சூறையாடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கிழக்கு மண்டல அலுவலர் முகமன்அவுஸ் கே .புதூர் காவல் துறையில், புகார் செய்தார். காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து கார்த்திக், திருஞானம் ,விஜய், மூவரையும் கைது செய்தனர்.
ரூ 46 லட்சத்து, 66ஆயிரம் மோசடி!
பிபி குளம் முல்லை நகர் நேருஜி தெருவை சேர்ந்தவர் மல்லிகா (70), இவரது மகனுக்கு அரசு வேலைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். இவரிடம் அறிமுகமான சோழவந்தான் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த தியாகராஜன் மகன் செந்தில்குமார், தான் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பல்வேறு கட்டங்களாக ரூ 46 லட்சத்து 66 ஆயிரத்து 820 ஐ வாங்கியுள்ளார். ஆனால் அவர் கூறியபடி அரசு வேலை வாங்கித் தரவில்லை. ஏமாற்றியது தெரிய வந்தது. இது குறித்து மல்லிகா மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில், புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து,திருட்டு!
தத்தனேரி கொன்னவாயன் சாலை பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் ஆனந்தபாபு மனைவி மாரிச்செல்வி (27), இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த ரூ20ஆயிரம் மதிப்புள்ள எல்.இ.டி. டிவியை மர்ம ஆசாமி திருச்டி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து மாரிச்செல்வி செல்லூர் காவல் துறையில், புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி