மதுரை : மதுரை அலங்காநல்லூர் காந்திகிராமம் பெருமாள் கோவில், தெருவை சேர்ந்த பிரதாப் (32),
இவர் ,மதுரை நகரில், செயின் பறிப்பு வழிப்பறி சம்பவங்களில், தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இவரை ,காவல் துறையினர், கண்காணித்து வந்த நிலையில், இவர் பொது பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில்,
தொடர்ந்து நடந்து வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையர் திரு. செந்தில்குமார், உத்தரவிட்டார். இவருடைய உத்தரவை தொடர்ந்து , காவல் துறையினர், பிரதாப்பை குண்டர் சட்டத்தில். கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
மூதாட்டி தீக்குளித்து பலி!
மதுரை அனுப்பானடி, வடக்குத் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் மனைவி ராமு (73), அவருக்கு வயிற்று புற்றுநோய் உள்ளது. இதற்காக அவருக்கு தனியார் மருத்துவமனையில், சிகிச்சை தரப்பட்டது. ஆனாலும் நோய் முற்றிலுமாக குணம் ஆகவில்லை. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த ராமு நேற்று நள்ளிரவு வீட்டில், தீ குளித்து தற்கொலை செய்துக் கொண்டார். இது தொடர்பாக தெப்பக்குளம் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர் பலி!
மதுரை ஆத்திகுளம், வீரப்புலவர் காலனியைச் சேர்ந்தவர் கருப்பையா (77), இவர் நேற்று இரவு மகன் கணேஷ்குமார் உடன் மோட்டார் சைக்கிளில், வெளியே புறப்பட்டுச் சென்றார். அப்போது மூன்றுமாவடி அருகே, மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியது. இதில் தூக்கி வீசப்பட்ட கருப்பையா படுகாயங்களுடன் விழுந்து ரத்த வெள்ளத்தில், உயிருக்கு போராடினார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருந்தபோதிலும் மருத்துவமனைக்கு, செல்லும் வழியிலேயே, கருப்பையா பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக மதுரை மாநகர போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர், , பிரிவுவழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இதுதொடர்பாக மேலும் தீவிர விசாரணை, நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி