வாலிபருக்கு உருட்டுகட்டை அடி!
மதுரை : , ஆழ்வார்புரம் வைகை வடகரையை சேர்ந்த ஆசைத்தம்பி (26), இவர் தெற்கு மாரட் வீதி பாண்டிய வேளாளர் தெரு சந்திப்பில், சென்ற போது அவரை வழிமறித்த கீரைதுரையைச் சேர்ந்த ராமர் (56), என்பவர் தகராறு செய்து கட்டையால் தாக்கி உள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆசைத்தம்பி தெற்கு வாசல் காவல் துறையில், புகார் செய்தார். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து ராமரை கைது செய்தனர்.
முன்விரோதத்தில் தாக்குதல், 5 பேர் கைது!
மதிச்சியம் ஆசாரி தோப்புவை சேர்ந்தவர் பழனிச்சாமி (44), இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், அவரை வழிமறித்த ஐந்துபேர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பழனிச்சாமி மதிச்சியம் காவல் துறையில் , புகார் செய்தார்.காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து அவரை தாக்கிய முருகன், சூர்யா என்ற கபடி சூர்யா, மாரிமுத்து என்ற ஆட்டு மாரி,வெங்கட ராஜேஷ், அபிஸ் குமார் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
17 வயது சிறுவன் கைது!
திருமோகூரைச் சேர்ந்தவர் (17), வயது சிறுவன் .இவன் தல்லாகுளம் பெரியநாச்சி அம்மன் கோவில், தெருவைச் சேர்ந்த 12- மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார் .அவருக்கு திருமண ஆசை காட்டி அவரை கற்பழித்துள்ளார். இந்த சம்பவம் 2021, நவம்பர் மாதம் முதல் நடந்து வந்துள்ளது. இது அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் செய்தனர். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.
மூதாட்டி தீக்குளித்து தற்கொலை!
எஸ். எஸ். காலனி சம்மட்டிபுரம் முல்லை தெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி (70), இவர் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து எஸ் எஸ் காலனி காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து மூதாட்டியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி பலி!
செல்லூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குரு (55), இவர் கட்டிட தொழிலாளி ஆவார். இவர் தாகூர் நகர் ஆர்.ஆர்.நகரில் இரண்டு மாடி கட்டிடத்தில், கட்டிட பணி செய்து கொண்டிருந்தார். அப்போது கால் தவறி திடீரென்று கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து மனைவி சுந்தரி திருப்பாலை காவல் துறையில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து தொழிலாளி குருவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்து வட்டி கும்பல் கைது!
மதுரை பழைய குயவர்பாளையம் ரோடு காஸிம் அலி தோப்பு வை சேர்ந்தவர் ஜெர்மனி(43), இவர் வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த கோட்டைச்சாமி மகன் சித்திரை அழகுவிடம் ரூ .50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அந்த தொகையை அசலும் வட்டியுமாக திருப்பி செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கூடுதலாக கந்து வட்டி கேட்டு சித்திரை அழகு ,காமராஜர்புரம் இந்திரா நகரை சேர்ந்த லட்சுமி (65), வில்லாபுரம் மயானக் கரை ரோட்டை சேர்ந்த கருப்பையா மகன் மோகன்ராஜ் (31), ஆகிய மூவரும் ஜெர்மனி வீட்டுக்கு சென்று அவரை ஆபாசமாக பேசி கந்து வட்டி கேட்டு மிரட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஜெர்மனி கொடுத்த புகாரின் பேரில் கீரைத்துரை காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து இவர்கள் மூவரையும் கைது செய்தனர். இவர்கள் மூவரும் மற்றொரு பகுதியான காமராஜர்புரம் வடக்கு தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி கீதா (52), என்பவருக்கு ரூ 50, ஆயிரம் கடன் கொடுத்துள்ளனர். இவரும் அசலும் வட்டியுமாக சேர்த்து திருப்பி செலுத்திய நிலையில், இவர் வீட்டிற்கு சென்று கூடுதலாக கந்துவட்டி கேட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து கீதா கீரைத்துரை காவல் துறையில் , புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து இருவேறு இடங்களில் 2 பேரிடமும் மிரட்டல் விடுத்த மூன்று பேரையும் கந்துவட்டி சட்டத்தில் கைது செய்தனர்.
கல்வீசி தாக்குதல், 3 வாலிபர்கள் கைது !
திடீர் நகர் காவல் நிலைய காவலர் சரவணன். இவர் ஓ.பி.யில் காவல் பணியில், ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த திடீர் நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சியாம் (18), ராபியா மகன் யாஸின், மாடசாமி மகன் பாஸ்கர் என்ற சுண்டு, ராஜசேகர் மகன் முத்து 18 ஆகிய நால்வரும் சரமாரியாக காவல் நிலையம் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் ஜன்னல் கண்ணாடி உடைந்து சுக்குநூறானது. இந்த சம்பவம் குறித்து காவலர் சரவணன் கொடுத்த புகாரில் டீ நகர் காவல் துறையினர் , வழக்கு பதிவு செய்து சியாம் ,பாஸ்கர் என்ற சுண்டு, முத்து மூவரையும் கைது செய்தனர். தப்பியோடிய யாசினை தேடி வருகின்றனர்.
டீ நகரை சேர்ந்தவர் பாண்டி மனைவி விமலா (35), இவரை வழிமறித்த சியாம் (18), யாசின், பாஸ்கர் என்ற சுண்டு, 2 முத்து ஆகிய நான்குபேரும் ஆபாசமாக பேசி மிரட்டிஉள்ளனர். இந்த சம்பவம் குறித்து விமலா திடர்நகர் காவல் துறையில், புகார் செய்தார். காவல் துறையினர் , வழக்குப்பதிவு செய்து அவர்கள் மூவரையும் கைது செய்தனர. இவர்கள் மூவரும் காவல்நிலையத்தின் மீது கல்வீசி தாக்கி கைதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பணம் திருட்டு, 3பெண்கள் கைது!
ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் நான்காவது தெருவை சேர்ந்தவர் லட்சுமி (60), இவர் பாண்டிய வேளாளர் தெருசந்திப்பில் டீக்கடை அருகே சென்றபோது இவரிடமிருந்து ரூபாய் இரண்டாயிரத்தை சிலர் திருடி விட்டனர் . இந்த திருட்டு குறித்து லட்சுமி தெற்குவாசல் காவல் துறையில், புகார் செய்தார். காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆய்வில் பெண்கள் திருடியது தெரியவந்தது.அவர்கள் திருச்சி பழைய சமயபுரத்தை சேர்ந்த விஜயலட்சுமி (41), அதே பகுதியை சேர்ந்த கோமதி (45), சுதா (33), ஆகிய மூவர் என்று தெரியவந்தது. அவர்கள் மூவரையும் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி