ரூ ஏழு கோடி சொத்துக்கள் முடக்கம், எஸ்.பி அதிரடி!
மதுரை : மதுரை மாவட்டத்தில், ஒத்தக்கடை நாகமலை புதுக்கோட்டை சேடப்பட்டி அரசம்பட்டி ஆகிய காவல் நிலைய சரகத்தில், கஞ்சா கடத்திய மற்றும் பதுக்கி வைத்திருந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதன் மூலமாக அவர்களின் ஈட்டிய சொத்துக்களான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மற்றும் அவர்களின், உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது . அதன்படி 41 பேரின் 15 வீடுகள் 21 இடம் மற்றும் நிலங்கள்5 கடைகள் என ரூ 7 கோடி ரூ.3 லட்சத்து 51 ஆயிரத்து 922 அசையா சொத்துகளும், இரண்டு நான்கு சக்கர வாகனமும் இரண்டு இருசக்கர வாகனமும், என ரூ 8 லட்சத்து 49 ஆயிரத்து 981 அசைவம் சொத்துக்கள் என மொத்தம் ஏழு கோடி 12 லட்சத்து ஆயிரத்து 903 முடக்கம் செய்யப்பட்டது.
கஞ்சா வழக்கில், 35 பேர் கைது!
மேலும் கஞ்சா வழக்கில், 35 பேர் கைது செய்யப்பட்டு 11 பேர் குண்டர் சட்டத்தின் மூலம் நடவடிக்கை மூலம் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எனவே மதுரை மாவட்டத்தில், சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் கடத்தலில், ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுடைய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் முடக்கப்படும் என்று காவல் சூப்பிரண்டு திரு. சிவப்பிரசாத், தெரிவித்தார்.
கொலை முயற்சி, வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர், குண்டர் சட்டத்தில் கைது!
மதுரை ஜெய்ஹிந்த்புரம் மீனாம்பிகை நகர் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் பூமாரி மகன் ஹரிஷ் பாண்டி (21), இவர் மதுரையில், கொலை முயற்சி வழிப்பறி உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில், ஈடுபட்டு கைது செய்யப்பட்டு மத்திய சிறையில், அடைக்கப்பட்டுள்ளார். இவரது இந்த செயலை கட்டுப்படுத்தும் விதமாக அவரை குண்டர் சட்டத்தில், கைது செய்ய காவல் ஆணையர் திரு. செந்தில்குமார், உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் ஹரிஸ்பாண்டியை காவல் துறையினர், குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
கத்தி முனையில் வழிப்பறி, 3 பேர் கைது!
அவனியாபுரம் பராசக்தி நகர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (44), இவர் அருப்புக்கோட்டை மெயின் ரோடு வில்லாபுரம் பகுதியில், சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுவன் உள்பட நான்கு பேர் அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்று விட்டனர் .இந்த சம்பவம் குறித்து சதீஷ்குமார் கீரைத்துறை காவல் துறையில், புகார் செய்தார். காவல் துறையினர் , வழக்கு பதிவு செய்து அவரிடம் செல்போன் பறித்த எம். கே. புரம் செட்டியூரணியை சேர்ந்த சபரி மணி என்ற சபரி (29) ,வில்லாபுரம் அன்பு நகரை சேர்ந்த கார்மேகம் மகன் பாலமுருகன் (23), வில்லாபுரத்தை சேர்ந்த (17), வயது சிறுவனையும் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.
நகை பணம் பறிப்பு, இரண்டு பேர் கைது!
மதுரை பாண்டியன் நகரை சேர்ந்தவர் மருதுபாண்டி மனைவி செல்ல மீனாட்சி, என்ற ஸ்ரீ தினேஷா (20), இவருக்கும் இவரது கணவர் மருதுபாண்டியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழுகின்றனர். கணவர் மருது பாண்டியிடம் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வல்லக்கோட்டையை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் மணிகண்ட பிரபு (28), குமாரம் நடுத்தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி (40), இருவரும் செல்ல மீனாட்சி பற்றி அவதூறாக கூறி அடிக்கடி மருதுபாண்டியிடமிருந்து இருந்து மனைவியின் நகை பணத்தை வாங்கி ஏமாற்றி உள்ளனர். இந்த சம்பவம் மனைவி செல்ல மீனாட்சிக்கு பின்னர் தெரிய வந்தது. இது குறித்து அவர் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் துறையினர் , வழக்கு பதிவு செய்து மணிகண்டபிரபுவையும், முத்துப்பாண்டியையும் கைது செய்தனர்.
வாலிபர் விஷம் குடித்து, தற்கொலை!
ஒத்தக்கடை சீதாலட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜாராம் மகன் நம்பிராஜன் (36), இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சலில், இருந்தவர் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி கழிவரை அருகே விஷம் அருந்தி மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில், சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திடீர் நகர் காவல் துறையினர் , வழக்கு பதிவு செய்து நம்பிராஜனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.