கத்தி முனையில் வழிப்பறி , 6 பேர் கைது!
மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் இளங்கோ மகன் அருண்பாண்டி (25) இவர் ஜெய்ஹிந்த்புரம் இரண்டாவது தெருவில், சென்று கொண்டிருந்தார். அவரை கீரைத்துறை புது மகாலிப்பட்டி ரோட்டை சேர்ந்த முருகன் மகன் அருமை நாயகம் (27), பாரதியார் ரோட்டை சேர்ந்த கருப்புசாமி மகன் கண்ணன் (23) இருவரும் கத்தி முனையில் மிரட்டி ரூ 435 ஐ வழிப்பறி செய்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து அருண்பாண்டி ஜெய்ஹிந்த்புரம் காவல் துறையில் , புகார் செய்தார். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து அருமை நாயகத்தையும், கண்ணனையும் கைது செய்தனர்.
நரிமேடு தாமஸ் தெருவை சேர்ந்தவர் அய்யனார் மகன் விக்னேஸ்வரன் (22), இவர் குலமங்கலம் ரோடு 50 அடி ரோடு சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அவரை செல்லூர் காமராஜர் இரண்டாவது தெருவை சேர்ந்த மகாராஜன் மகன் விஜி (27), செல்லூர் கீழே தோப்பு முப்பிலி சின்னான் மகன் சுரேஷ் (29), விஜய் ,பிரசன்னா என்ற பண்ணு 26 ஆகியோர் ரூ1500ஐ வழிப்பறி செய்து விட்டனர். இது குறித்து விக்னேஸ்வரன் கொடுத்த புகாரில் செல்லூர் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விஜி, சுரேஷ், பிரசன்னா ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
மதுரை காந்திநகர் சூ மேக்கர் காலனியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (50), இவர் குருவிக்காரன் சாலையில் உள்ள ஒயின்ஷாப் அருகேசென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த முந்திரி தோப்பு லால் பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த வினோத் ராஜா (33), என்பவர் கத்தி முனையில் மிரட்டி ரூ 500ஐ வழிப்பறி செய்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து ராஜரத்தினம் அண்ணாநகர் காவல் துறையில், புகார் செய்தார். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறி செய்த வினோத்ராஜாவை கைது செய்தனர்.
நள்ளிரவில் மேனேஜரை மிரட்டி, ரூ27 ஆயிரம் கொள்ளை!
பொதும்பு வாசன் நகரை சேர்ந்தவர் தங்கவேலு (66), இவர் பாலமேடு மெயின் ரோட்டில், உள்ள பெட்ரோல் பங்கில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். நள்ளிரவில் இவர் பணியில், இருந்த போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அங்கு வந்து மேனேஜரை பெரிய கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்த பணம் ரூ27 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து தங்கவேலு கூடல் புதூர் காவல் துறையில், புகார் செய்தார் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி