மதுரை : திருப்புத்துார் காவல் ஆய்வாளர் திரு. சுந்தரமகாலிங்கம் ஜூன் 10 ம் தேதி மாலை 5:30 மணிக்கு தென்மாப்பட்டு பகுதியில் ரோந்து சென்றார். பேருந்து நிருத்தம் அருகே நின்றிருந்த தென்மாபட்டு பழனிக்குமார் (65), என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்தார். அவர் காலாவதியான வட்டிக்கடை லைசென்ஸ் வைத்திருந்தார். விசாரித்ததில், மல்லிகா, முத்தரசி, சுந்தரம் ஆகியோரிடம் அதிக வட்டிக்கு கடன் வழங்கியிருந்தது தெரிந்தது. இதையடுத்து கந்துவட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் பழனிக்குமாரை காவல் துறையினர் ,கைது செய்தனர்.
வீட்டில் 6 பவுன் திருட்டு!
சாலைக்கிராமம் மேலத்தெரு முகமது இஸ்மாயில் (53), ஓட்டலில் சப்ளையராக உள்ளார். ஜூன் 9 ம் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றிருந்தார். அன்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் மாடி வழியாக வீட்டுக்குள் புகுந்து பீரோவில், இருந்த 6 பவுன் நகை, ரூ.15,000 யை திருடிச்சென்றனர். எஸ்.ஐ., திரு. பன்னீர்செல்வம் விசாரிக்கிறார்.
மணல் கடத்தல், இருவர் கைது!
திருப்புவனம்: திருப்புவனம் மருதமரம் எதிரே உள்ள வைகை ஆற்றில், வேனில் மணல் கடத்தி வந்துள்ளனர். ரோந்து சென்ற காவல் துறையின ரிடம், அழகுசுந்தரம் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா, மணல் கடத்தியதாக மதுரை சக்குடி ஓட்டுநர் லட்சுமணன் (30), லோடுமேன் கருப்பு 63, வேன் உரிமையாளர் சங்கர் (40), ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிந்து, ஓட்டுநர், லோடு மேனை கைது செய்தார். மணல் கடத்திய வேனை பறிமுதல் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி