மதுரை : கர்நாடக மாநிலம், பெங்களூர் ராமமூர்த்தி, நகரை சேர்ந்தவர் ராஜேஷ்அயர்சங்கி(34), இவர் குடும்பத்துடன் அழகர் கோவிலுக்கு, சாமி கும்பிட காரில் வந்தார். தனது காரை கார் பார்க்கிங்கில், நிறுத்தி விட்டு சாமி கும்பிட சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி, உடைக்கப்பட்டு இருந்தது. காருக்குள் வைத்திருந்த ஐபோன் 1 ,லேப்டாப்1, மணிபர்ஸ் முதலியவைகளை மர்ம ஆசாமி திருடிவிட்டார். இந்த திருட்டு குறித்து ராஜேஷ், அயர்சங்கி அப்பந்திருப்பதி காவல் துறையிடம், புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, குற்றவாளி அடையாளம் தெரிந்தது. பின்னர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் மில் காலனியைச் சேர்ந்த, கோபாலகிருஷ்ணன் (37), என்பவரை கைது செய்தனர்.
—————————————–
சிவகங்கை மாவட்டம் , தேவகோட்டை சிலம்புனி, வடக்கு தெருவை சேர்ந்தவர் கனகவேல் (42), இவர் மது போதைக்கு அடிமையாகி இருந்தார். மது போதையை மறைக்க, மதுரையில் சிகிச்சை பெற்று பின்னர், எல்லிஸ் நகர் கருமாரி அம்மன் கோவில் தெரு அருகே ஒரு மஹாலில், தங்கியிருந்தார். தங்கி இருந்தவர் திடீரென்று, மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய, சகோதரி வளர்மதி எஸ்.எஸ் காலனி காவல் துறையிடம், புகார் செய்தார் . வழக்கு பதிவு செய்து, அவரது இறபிர்க்கான, காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
——————————————-
சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் திரு. அன்புதாசன், இவர் பழங்காநத்தம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் ராமர் கோவில், பின்புறம் சென்றபோது சந்தேகப்படும்படியாக, வாலிபர் ஒருவர் பதுங்கியதை கண்டார். அவரை பிடித்து சோதனை செய்தார். அந்த வாலிபர் கத்தி ஒன்றை, மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தார். அவற்றை பறிமுதல் செய்து, அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த வாலிபர் பழங்காநத்தம் வடக்கு தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (27), என்று தெரிந்தது. அவர் வழிப்பறியில் ஈடுபடும் திட்டத்தில் அந்த பகுதியில் பதுங்கி இருந்தது, விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக அந்த வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்த கத்தியையும், பறிமுதல் செய்தார்.
————————————–
மதுரை மே 11, வில்லாபுரம் வீட்டு வசதி, வாரிய குடியிருப்பைச் சேர்ந்த அருண்குமார் (34), இவர் வீட்டு வாசலில் ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள தனது பைக்கை, நிறுத்தி இருந்தார். இந்த பைக்கை மர்ம ஆசாமி திருடிச் சென்றுவிட்டார். இந்த திருட்டு குறித்து அருண்குமார், அவனியாபுரம் காவல் துறையில் , புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து பைக் திருடிய, ஆசாமியை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி