பழ வியாபாரிகளுக்குள் மோதல், 4 பேர் கைது!
மதுரை : மதுரை சத்தியமூர்த்தி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டிமீனா (47), இவர் பீ.பீ.குளம் உழவர் சந்தை அருகே பழ வியாபாரம் செய்து வருகிறார். மதுரை முடுவார்பட்டியை சேர்ந்தவர் சிவகாமி (47), இவரும் அதே பகுதியில் உழவர் சந்தை அருகே பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் பழவியாபாரம் செய்வதில் முன் விரோதம் இருந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கையால் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து பாண்டி மீனா தல்லாகுளம் காவல்துறையில், புகார் செய்தார். காவல் துறையினர், முடிவார்பட்டியைச் சேர்ந்த சிவகாமி (47), பால்பாண்டி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிவகாமியை கைது செய்தனர். இந்த மோதல் குறித்து சிவகாமி கொடுத்த புகாரை தொடர்ந்து காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து பாண்டியம்மாள் என்ற பாண்டி மீனா ,பவித்ரா (21), சூர்யா (20), இவர்கள் மூவரையும் கைது செய்தனர்.
வாலிபர் தற்கொலை!
காமராஜர்புரம் சுடலை முத்து பிள்ளை தெருவை சேர்ந்தவர் பழனிவேல், மகன் முத்துப்பாண்டி (22), இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தெப்பக்குளம் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து முத்து பாண்டியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன் மேனியில் தற்கொலை!
பொன்மேனியை சேர்ந்தவர் ஆஸ்மா (50), இவர் சிலதினங்களாக மன உலைச்சலில், இருந்துவந்தார். இந்நிலையில் காளி முத்து நகரில், உள்ள வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ் காலனிகாவல் துறையினர், வழக்கு பதிவு செய்து ஆஸ்மாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்ப்யூட்டர் உபகரணங்கள், சிசிடிவி கேமராக்கள், திருட்டு 4பேர் கைது!
வடக்கு மாசி வீதி கம்பளைமருது சந்துவை சேர்ந்தவர் சரஸ்வதி தேவி (47), இவர் செல்லத்தம்மன் கோவில் தெருவில் மருந்து விற்பனை நிலையம் வைத்துள்ளார் .இங்கு நள்ளிரவில், கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் அங்கு வைத்திருந்த கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் உபகரணங்கள், செல்போன்,6 சிசிடிவி கேமரா உட்பட 2 லட்சத்து 83 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இந்த திருட்டு குறித்து சரஸ்வதிதேவி திலகர்திடல் காவல்துறையில் , புகார் செய்தார். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் இந்த திருட்டில், ஈடுபட்ட ஆண்டார்கட்டாரம் நந்தி கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஜீவானந்தம் (27), அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் தனுஷ் (18), மச்சக்காளை மகன் மாரிமுத்து (37), கருப்பாயி ஊரணி சுப்புராம்தெரு அய்யங்காளை மகன் பிரபு (20), ஆகிய நான்குபேரையும் கைது செய்தனர்.
ஒப்பந்த அடிப்படையில், லாரி விற்பனை செய்து ரூ7 லட்சம் மோசடி!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல், முனிசிபல் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (46), இவர் நாகனாகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெரு மாரி மகன் சதீஷ் மற்றும் சேகர் இருவரிடமும் ஒப்பந்த அடிப்படையில், லாரியை விலைக்கு வாங்கியுள்ளார். அதற்கான தொகையை பாக்கி இல்லாமல் ரூ 7 லட்சம் செலுத்திய பிறகும் லாரியை ஒப்படைக்காமல் சதீஷ் ஏமாற்றியுள்ளார. இந்த சம்பவம் குறித்து சண்முகம் தல்லாகுளம் காவல்துறையில் ,புகார் செய்தார். காவல் துறையினர், சதீஷ் மற்றும் சேகர் மீது வழக்கு பதிவு செய்து சதீஷ் கைது செய்தனர்.
கார் வாங்கி தருவதாக, லட்ச கணக்கில் மோசடி ஒருவர் கைது!
ராமநாதபுரம் மாவட்டம், பாண்டியூர் தாலுகா வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமலிங்க மகன் செல்லப்பாண்டி (28), இவர் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா எம் நெடுங்குளத்தைச் சேர்ந்த மாரி மகன் சதீஷிஇடம் மதுரை தல்லாகுளம் பகுதியில் வைத்து கார் வாங்கி தரும்படி ரூ 5 லட்சத்து 36 ஆயிரம் கொடுத்துள்ளார். 2019 ஆண்டில் அவர் பணம் கொடுத்துள்ளார் ஆனால் அவர் கூறியபடி கார் வாங்கி கொடுக்காமல், செல்லப்பாண்டியை ஏமாற்றிவந்துள்ளார். பலமுறை கேட்டும் காரும் வாங்கிக்கொடுக்கவில்லை ,பணத்தையுயும் திருப்பித்தராமல், ஏமாற்றி வந்துள்ளார். இதனால் இது குறித்து செல்லப்பாண்டி தல்லாகுளம் காவல்துறையில், புகார் செய்தார். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து சதீஷை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி