மதுரை : மதுரை மே 7, தெற்கு வாசல் பிள்ளையார்பாளையத்தை, சேர்ந்தவர் செந்தில்குமார்(41), இவர் குருவிகாரன் சாலையில் மதுகடை முன்பாக, தனக்கு சொந்தமான 10 ஆயிரம் மதிப்புள்ள, இரு சக்கரவாகனம் நிறுத்தி இருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, அந்த இரு சக்கரவாகனம், மர்ம ஆசாமி திருடி விட்டார். இந்த திருட்டு குறித்து செந்தில்குமார், அண்ணாநகர், காவல் துறையினரிடம், புகார் செய்தார்.
மற்றொரு பைக்திருட்டு, அரியூர் நேரு தெருவை சேர்ந்த, சங்கையா, இவர் அண்ணா நகரில் உள்ள ஒரு கடையின் முன்பாக ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள, பைக்கை நிறுத்தி இருந்தார். பின்னர் அவர் வந்து பார்த்தபோது, அந்த பைக்கும் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து சங்கையா, அண்ணாநகர் காவல் துறையினரிடம், புகார் செய்தார். காவல் துறையினர் ,வழக்குப்பதிவு செய்து 2 இரு சக்கரவாகனங்களையும், திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
———————————————-
மதுரை மாவட்டம், பேரையூர் சின்னகட்டலை, மேல தெருவை சேர்ந்தவர் சீதா (60), இவரது உறவினர் மதுரை அரசு மருத்துவமனை, பிரசவ வார்டில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரைக் காண சீதா, வந்திருந்தார். அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க செயினை, மற்றும் பெண் ஒருவர் திருடி விட்டார். இது தொடர்பாக சீதா, மதிச்சியம், காவல் துறையில், புகார் செய்தார். காவல் துறையினர் ,வழக்கு பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது பழங்காநத்தம் தெற்கு தெருவைச் சேர்ந்த, நிவேதா (21), என்பவர் திருடியது தெரியவந்தது. மதிச்சியம் காவல் துறையினர் ,அவரை கைது செய்தனர்.
———————————————–
செல்லூர் மீனாம்பாள்புரம், சத்தியமூர்த்தி மூன்றாவது தெருவை சேர்ந்த, கோட்டை தாய் (28), அதே பகுதியை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம், மகன் அழகுராஜா (25), அவருடைய தாய் கணேஸ்வரி (47), இருவரும் கோட்டை தாயின் வீடு புகுந்து அவரை, ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து, கோட்டைத்தாய் செல்லூர் காவல் துறையில், புகார் செய்தார். காவல் துறையினர் , வழக்குப்பதிவு செய்து அவரை ஆபாசமாக பேசி மிரட்டிய தாயும் மகனும் ஆகிய கணேஸ்வரி, அழகு ராஜாவை கைது செய்தனர்.
——————————————–
மதுரை இஸ்மாயில்புரம், 12வது தெருவை சேர்ந்தவர் ஜாகீர்(38), இவர் கூடல்புதூர், பாலமேடு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து, கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 500ஐ, வழிப்பறி செய்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து, ஷாகீர் கூடல்புதூர் காவல் துறையில், புகார் செய்தார். காவல் துறையினர். வழக்குபதிவு செய்து, அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட தல்லாகுளம், சின்ன சொக்கிகுளம் ,முதல் தெருவை சேர்ந்த சாமுவேல் (21), கேரளா, என்பவரை கைது செய்தனர்.
மற்றொரு வழிப்பறி , உசிலம்பட்டி கருமாத்தூரை, சேர்ந்தவர் பாண்டி (52), இவர் ஐயர் பங்களா, புது நத்தம் ரோட்டில் சென்ற போது அவரிடம் இரண்டு வாலிபர்கள், வழிமறித்து கத்திமுனையில் ரூபாய் 2 ஆயிரத்தை, வழிப்பறி செய்து விட்டனர். இந்த சம்பவம்குறித்து பாண்டி, கொடுத்த புகாரில் தல்லாகுளம்,காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து அவரிடம் வழிப்பறி செய்த, பீபிகுளம் நேதாஜி, மெயின் ரோட்டை சேர்ந்த ஜோதிபாசு (19), பீபிகுளம் காந்திஜி தெருவை சேர்ந்த கோகுல் விஜய் (28), இருவரையும் கைது செய்தனர். அவருடன் உடன் இருந்த, மற்றொருவரை தேடி வருகின்றனர்.
————————————-
மதுரை மோதிலால், மெயின் ரோட்டை சேர்ந்த தங்கராசு (35), இவர் மெலபொன்னகரம், மெயின் ரோட்டில் சென்ற போது அவரை வழிமறித்து, கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 1400ஐ, வழிப்பறி செய்து விட்டனர் .இந்த வழிப்பறி குறித்து தங்கராஜ் , கரிமேடு காவல் துறையில், புகார் செய்தார். காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து மஞ்சள் மேடு காலனியை, சேர்ந்த ஜீவமணி, என்ற தீப்பெட்டி (19), என்பவரை கைது செய்தனர். ஆரப்பாளையம் கண்மாய்க்கரை, சகாயமாதா தெருவைச் சேர்ந்த அஜய், பிரசன்ன குமார், என்ற குட்டிச்சாக்குவை தேடிவருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி