மதுரை : மதுரை மே 6, பொது இடத்தில் அவதூறாக பேசி, கூச்சல் போட்டு ரகளையில் ஈடுபட்ட, வாலிபர்களை தட்டி கேட்டவரை, தாக்கிய மூன்று பேரை காவல் துறையினர், கைதுசெய்தனர். மதுரை அருகே காடுபட்டி, சேர்ந்தவர் சந்தீப் ராஜ் (32) , இவர் ஆவின் நகர் 2, வது தெரு வழியாக சென்றபோது 4 வாலிபர்கள், பொது இடத்தில் நின்று அசிங்கமாகபேசி கூச்சல்போட்டு ரகளையில், ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை சந்தீப்ராஜ், தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் அவரை, சரமாரியாக தாக்கினர் . இந்த சம்பவம் குறித்து ராஜ், அண்ணா நகர் காவல் துறையில், காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து,பிரதீப் குமார் (32), யாகப்பா நகர் வைகை வீதியை, சேர்ந்த மகன் லோகேஸ்வரன், என்ற போதை லோகேஷ் (22) , ஆவின் நகரை சேர்ந்த, ஆசிக் ராஜா (26) , ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களுடன் , சேர்ந்து ரகளையில் ஈடுபட்டு தப்பி ஓடிய, ஜெயபிரகாஷை ,தேடி வருகின்றனர்.
—————————————
மதுரை , கே புதூர் டி.ஆ.ர் ஓ காலனியை சேர்ந்த சரவணன் (34), இவர் அதே பகுதியில் நடந்து சென்றபோது, அவரை 2 வாலிபர்கள் வழிமறித்து , அவரை மிரட்டி , அவரிடம் இருந்து முக்கால் பவுன் மோதிரம், ஒன்றையும், 100 ரூபாய் வழிப்பறி செய்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து சரவணன், தல்லாகுளம் காவல் துறையில், புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து , இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிபிகுளம் நேதாஜி மெயின் ரோடு ஜோதிபாசு (19) ,நாராயணபுரம் இரண்டாவது தெரு பேங்க் காலனியை சேர்ந்த, வசந்த கண்ணன்(23), இருவரையும் கைது செய்தனர்.
————————————-
பெத்தானியாபுரத்தில், பரிதாபம் மதுரை மே 6, வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், மனமுடைந்த தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெத்தானியாபுரம் INTUC காலனி பிள்ளையார் கோவில் தெருவை, சேர்ந்த மணிகண்டன் (52), இவர் தொழிலதிபர், அவருடைய வியாபாரத்தில், நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பணக் கஷ்டமும் ஏற்பட்டது. இதன் காரணமாக மனம் உடைந்த, மணிகண்டன் வீட்டில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மனைவி சாந்தி, கரிமேடு காவல் துறையில், புகார் செய்தார். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து மணிகண்டனின், தற்கொலைக்கான காரணம் குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
————————————-
மதுரை மே 6 , திருநகர், காவல் ஆய்வாளர் திரு. கணேசன், இவர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். .அவர் விளாச்சேரி, ஆதி சிவன் கோவில் அருகே சென்ற போது, வாலிபர் ஒருவர் இவரை, கண்டதும் பதுங்கினார். அவரை பிடித்து விசாரணை நடத்தினார். அவரிடம் சோதனை செய்தபோது, அவர் கத்தி ஒன்றை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து அவரிடம் விசாரித்தபோது, அவர் வலையபட்டி, தெற்குத்தெரு சீமராஜன், என்று தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.
———————————-
மதுரை மே 6, திருப்பரங்குன்றத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியை உடைத்து, கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை காவல் துறையினர் , தேடி வருகின்றனர். திருப்பரங்குன்றத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதன் தலைமை ஆசிரியை திருமதி. சிவகாமி (58), வழக்கம்போல் சம்பவத்தன்று, இவர் பள்ளி நேரம் முடிந்து பூட்டிவிட்டு சென்றார். பின்னர் மறுநாள் வந்து பார்த்தபோது, பள்ளியின் கதவு மர்மநபர்களால், உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே புகுந்த, அந்த நபர்கள் பள்ளியில் வைத்திருந்த, பணம் ரூபாய் 10,000, விளையாட்டு உபகரணங்கள், மைக்ரோஸ்கோப், முதலியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியை திருமதி. சிவகாமி, திருப்பரங்குன்றம் காவல் துறையில், புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை, தேடி வருகின்றனர்.
—————————–
அண்ணாநகர் காவல் ஆய்வாளர் திரு.மோகன்தாஸ், இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் வண்டியூர் சுடுகாடு அருகே சென்றபோது, 3 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் ஒருவரை பிடித்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் யாகப்பா நகர் வைகை வீதி, லோகேஷ்வரன், என்ற போதை லோகேஷ் (22), என்று தெரிய வந்தது. அவரை கைது செய்து, மூன்றுகிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்.
—————————-
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இரும்பாடி, கருப்பட்டி பகுதியில், அதிக அளவு இளைஞர்கள் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி, பொதுமக்களை பல்வேறு இன்னல்களுக்கு, ஆளாக்கி வருகின்றனர். நேற்று இரவு,
அரசு பேருந்தை டூவீலர், கொண்டு மறித்து ஓட்டுனர், மற்றும் நடத்துனரை, தகாத வார்த்தைகளால் ,திட்டி மது பாட்டிலை உடைத்து குத்த முயன்ற, சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, சமூக ஆர்வலர் கூறியதாவது, கருப்பட்டி, இரும்பாடி பகுதியில், அதிக அளவில் இளைஞர்கள், கஞ்சா மற்றும் மது போதைக்கு, அடிமையாகி, மக்களை பல்வேறு இன்னல்களுக்கு, ஆளாக்கி வருகின்றனர். இதனால், இப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்கின்றனர் .
பள்ளி மாணவ மாணவிகள், பள்ளிக்கூடம் செல்ல பயப்படுகின்றனர். இதனால், அரசு பேருந்து ஓட்டுனர்கள், மற்றும் இந்த வழித்தடத்தில், பணிபுரிய பயப்படுகின்றனர். கஞ்சா மற்றும், மது போதையில், உள்ளவர்கள் அடிக்கடி, ரோட்டின் இருபுறங்களிலும் இருசக்கர வாகனத்தை நிறுத்திக்கொண்டு, தகாத வார்த்தைகளால் திட்டி வருவதாகவும், இதனால் உயிர் பயம் ஏற்படுவதாகும், கூறுகின்றனர். இது சம்பந்தமாக, பல முறை அதிகாரிகளுக்குத், தகவல் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும், எடுக்க வில்லை.
எனவே, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டு, காலை மாலை என இருவேளைகளிலும் நிரந்தரமாக, காவல் பணியில் ஆட்களை நியமிக்க வேண்டும். மக்களை அச்சுறுத்தும், வகையில் செயல்படும் 2 டாஸ்மாக் கடைகளை, உடனடியாக மூட வேண்டும். இளைஞர்களை நல்வழிப்படுத்த, தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் எனக் கூறினார்.
—————————————-
விருதுநகர் மாவட்டம் , சிவகாசி அருகேயுள்ள சிவகாமிபுரம், காலனி பகுதியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் (57), இவர் சாத்தூர் அருகேயுள்ள கத்தாளம்பட்டி, பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், இந்த பட்டாசு ஆலையில், ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி, சோலைவிக்னேஷ் (26), என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். பட்டாசு ஆலை விபத்து குறித்து, அம்மாபட்டி காவல்நிலைய, காவல் துறையினர், வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டாசு ஆலை உரிமையாளர் பெரியகருப்பன், அவரது மகன்கள் ராமச்சந்திரன் (34), சிதம்பரம் (31), மணிகண்டன் (28), ஆகியோர் மீது வழக்குபதிவு செய்த காவல் துறையினர் , இவர்களை கைது செய்வதற்காக, தீவிரமாக தேடி வந்தனர். தீவிர தேடுதல் வேட்டையில், சிதம்பரம் சிக்கினார், அவரை காவல் துறையினர் , கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் பட்டாசு ஆலை உரிமையாளர், உட்பட 3 பேரையும் காவல் துறையினர் ,தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி