மதுரை : கீழவாசல் லட்சுமிபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் கோபி (38), இவர் தெற்கு ஆவணி மூல வீதியில், நகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடைக்கு வந்த இரண்டு பேர் நகை வாங்குவது போல் நடித்து கடையில், இருந்த ஐந்து பவுன் எடை கொண்ட இரண்டு தங்கச்சங்கிலியை நூதன முறையில் திருடிச்சென்று விட்டனர். பின்னர் பொருள்களை சரிபார்த்த போது சங்கிலி, திருடு போனது தெரியவந்தது. இந்த திருட்டு குறித்து கடை உரிமையாளர் கோபி விளக்குத்தூண் காவல் துறையில் புகார் செய்தார் . காவல் துறையினர் ,வழக்குப்பதிவு செய்து செய்து சி.சி.டிவி.கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
மர்ம ஆசாமி, கைவரிசை!
கே.கே. நகர் லேக் வியூ கார்டன் முதல் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (64), சம்பவத்தன்று அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்வீட்டில், வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளியாலான பொருட்கள் பூஜை பொருள்கள், ரூ 5ஆயிரம் மதிப்புள்ள கேமரா ஒன்றையும் திருடிச் சென்று விட்டனர். இந்த திருட்டு குறித்து மகாலிங்கம் அண்ணாநகர் காவல் துறையில் புகார் செய்தார். காவல் துறையினர் , வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி